Home HEALTH TIPS காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது நல்லதா?

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது நல்லதா?

water health benifits

நல்லதுதான். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 2 தம்ளர் தண்ணீர் அருந்துவது நல்லது.

காரணம்: நாம் உறங்கும் போது கூட இரைப்பையில் சிறிதளவு அமிலம் சுரந்து கொண்டிருக்கும். வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தும் போது இந்த அமிலம் நீர்த்துவிடும்.

அல்சர் எனப்படும் வயிற்றுப்புண் வராது. மேலும், இரவில் உணவு செரிமானமாகி முடிந்ததும் சில வாயுக்கள் உற்பத்தியாகி, இரைப்பை மற்றும் குடல் பகுதிகளில் தேங்கியிருக்கும்.

இவ்வாயுக்கள் தண்ணீரில் கரைந்துவிடும். மலச்சிக்கல் ஏற்படாது. அதற்காக லிட்டர் கணக்கில் தண்ணீர் அருந்துவதும் கூடாது. எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்க நினைப்பவர்கள் காலையில் வெந்நீரை குடிக்கலாம். பொதுவாக வெந்நீர் அருந்துவது நல்லது.

வெந்நீர் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள்:

நாசி நெரிசலை போக்கலாம்.

செரிமான கோளாறிலிருந்து விடுபடலாம்.

ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது

உடலின் நச்சுத்தன்மை போக்குகிறது

மன அழுத்த அளவுகளை குறைகின்றது

நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தலாம்.

Exit mobile version