Home HEALTH TIPS கொளுத்தும் வெயிலுக்கு குளுகுளு புதினா சர்பத்… சிம்பிள் ஸ்டெப்ஸ் இதுதான்!

கொளுத்தும் வெயிலுக்கு குளுகுளு புதினா சர்பத்… சிம்பிள் ஸ்டெப்ஸ் இதுதான்!

புதினா சர்பத்

தேவையான பொருட்கள்: புதினா இலைச்சாறு 100 கிராம். சிவப்புக் கடுகு – 40 கிராம், படிக்காரத்தூன் 300 கிராம், வினிகர் 4.50 கிராம் இவைகளை ஒன்று சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து, காய்ச்ச வேண்டும். பாதியளவு சுண்டியதும் வடிகட்டி எடுத்துக் கொண்டு, பிறகு தேன் 250 கிராம் சேர்த்துக் காய்ச்சி, பாகுபதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சர்பத்தை 3 – 5 மில்லியளவு எடுத்து தண்ணீரில் கலந்து சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட்டால், நல்ல பசி உண்டாகும். இரைப் பையின் தீய விளைவுகள் நீங்கி விடும். நெஞ்சுச் சளி நீங்கி விடும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விந்து உற்பத்தி அதிகரித்து தாதுபலத்தை ஏற்படுத்தும். தாம்பத்ய உறவு மேம்படும்.

புதினா இலைச்சாறு, எலுமிச்சம்பழச் சாறு, தேன் சமமாகக் கலந்து. 30 மில்லியளவு ஆகாரத்துக்கு முன், தினம் மூன்றுவேளை சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு. கோடைகாலத்தில் ஏற்படும் புளிச்ச ஏப்பம், வயிற்றுப் போக்கு, கர்ப்ப கால மசக்கை வாந்தி இவைகள் நீங்கும். குடலில் தங்கியுள்ள நூல் புழுக்கள் மடிந்து விடும்.

புதினா இலைச்சாறும், கேரட் கிழங்குச் சாறும் சமமாகச் சேர்த்து கலந்து சாப்பிட்டால், நுரையீரவில் தேங்கியுள்ள சளி இளகி வெளியேறி விடும். புதினா இலைச்சாற்றைத் தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்தால் சரளமாகப் பேசவும் பாடவும் முடியும்.

புதினாவை அலட்சியமாக எண்ணாமல் அதன் மருத்துவ குணத்தை மனதில் கொண்டு ஏதேனும் ஒரு வகையில் உணவில் சேர்த்து வர மூளைக்கு நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும். மனதிற்கு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் தரும். உடல் சீராகும். எடை நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். மலச்சிக்கல் நீங்கும். கெட்ட கொழுப்பு கரையும். இரத்த சிவப்பணுக்களை அதிகப்படுத்தி இரத்த ஓட்டம் சீராக பயன்படும்.

புதினா இல்லாத பிரியாணி சுவை இருக்காது நாம் அறிந்ததே. ஆனால் பிரியாணி சைவமோ, அசைவமோ புதினா சேர்க்கும்போது தான் சுவையும் மனமும் அதிகரிக்கும். செரிமானத்திற்கும் நல்ல உதவியாக இருக்கும்.

Exit mobile version