Home NEWS பிளஸ் டூ தேர்வில் கடைசித் தேர்வு எழுதாதவர்களா நீங்கள்..? அப்போது இந்த...

பிளஸ் டூ தேர்வில் கடைசித் தேர்வு எழுதாதவர்களா நீங்கள்..? அப்போது இந்த செய்தியைப் படித்துப் பாருங்கள்..!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 12 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு தமிழகபாடத்திட்டத்தின் கீழ் உள்ள மாணவர்களுக்கு நடைபெற்றது. ஆனால் அதற்குள் கொரோனா வேகமாக பரவியதால் மார்ச் 24-ஆம் தேதியன்று நடைபெற இருந்த தேர்வில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த மாணவர்களுக்கு தனியே தேர்வு நடத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த கல்வியாண்டின் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடத்தி முடிக்கப்பட்டது. மார்ச் 24ஆம் தேதி நடத்தப்பட்ட பன்னிரண்டாம் வகுப்பு இறுதித்தேர்வில் பல மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. இவர்களுக்காக மீண்டும் தேர்வு நடத்த பெற்றோர்கள் மாணவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளதால் இந்த கோரிக்கையை ஏற்று முதலமைச்சர்,

தேர்வு எழுதாமல் விடுபட்டுள்ள மாணவர்கள் இந்தத் தேர்வை வருகிற ஜூலை 27ஆம் தேதியன்று எழுத அறிவுறுத்தி உள்ளார். எனவே மாணவர்கள் வசதிக்காக அவர்கள் தங்களது சொந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்றும் இதற்கான நுழைவுச் சீட்டினை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக அல்லது அவர்கள் பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் , தனித்தேர்வர்கள் சம்பந்தப்பட்ட தனித்தேர்வு மையங்களிலேயே நுழைவுச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டினை ஜூலை 17ஆம் தேதி இணையதளம் அல்லது பள்ளி வாயிலாக பெற்றுக் கொள்ளுங்கள்.

Exit mobile version