Home NEWS நாங்க ஏழை தான் இருந்தாலும் நீதி கிடைக்காமல் விடமாட்டோம் கதறும் சாத்தான்குளம் குடும்பம்

நாங்க ஏழை தான் இருந்தாலும் நீதி கிடைக்காமல் விடமாட்டோம் கதறும் சாத்தான்குளம் குடும்பம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ளது கல்விளை என்ற கிராமம். இங்கு வசித்து வந்தவர் 7 வயது சிறுமி. இவருக்கு அப்பா இல்லை, அம்மா வளர்த்து வந்துள்ளார். ரொம்பவும் ஏழ்மையான குடும்பத்தில் ஓலை குடிசை வீட்டில் கரண்ட் கூட இல்லாத சூழ்நிலையில் தான் இந்த சிறுமி வளர்ந்து வந்துள்ளார்.

இதே தெருவில் உள்ள ஒரு வீட்டில் இவர் டிவி பார்க்க செல்வது வழக்கம். இந்த வீட்டில் உள்ள இளைஞன் பெயர் முத்தீஸ்வரர் காலேஜில் படித்து வந்துள்ளார் என்றும் ஈஸ்வரன் வீட்டில் டிவி பார்க்க சிறுமி சென்றபொழுது முத்தீஸ்வரர் நண்பர் நிதிஷ்வரணும் இங்கு இருந்துள்ளார். சிறுமி டிவி பார்த்த வீட்டுக்கு வருவதை அவர்கள் விரும்பவில்லை. இதனால்தான் அடிக்கடி சிறுமி டிவி பார்க்க வீட்டுக்கு வருவதால் இவர்கள் எரிச்சலாகி உள்ளனர். இதனால் 2 பேரும் சிறுமியை வீட்டை விட்டு துரத்தி உள்ளனர். இதனால் கோபமடைந்த இந்த சிறுமி இவர்கள் மீது கல்லை எறிந்துள்ளார். இதனால் நண்பர்கள் கடுமையான கோபம் அடைந்து அந்த சிறுமியை கழுத்தை முதீஸ்வரன் இருக்கமாக பிடித்து தள்ளி விட்டுள்ளார். இதனால் சிறுமி உயிரிழந்துள்ளார்.

இந்த விஷயம் வெளியே தெரியக்கூடாது என்று எண்ணி வீட்டிலிருந்த டிரம்மில் சிறுமியின் சடலத்தை போட்டு அந்த ஓடை பாலம் அருகே கொண்டுபோய் விட்டுவிட்டு வந்து உள்ளனர். இந்த இடம் சிறுமி வீட்டில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இதற்கிடையே மிட்டாய் வாங்கலாம் என்று அவரது அம்மா தேடி அலைந்து உள்ளார். அந்த சமயத்தில்தான் சிறுமியின் சடலம் கிடப்பதை கண்டு போலீசார் விசாரணை ஆரம்பம் ஆனது.

இதுகுறித்து போலீசார் விசாரித்த இரண்டு மணி நேரத்திலேயே இந்த இரண்டு பேரையும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்ய அவர்களும் பயத்தில் எல்லா உண்மையையும் சொல்லி விட்டனர்.

ஆனால் சி சிறுமியின் பெற்றோர் காரணம் இல்லை இவர்கள் இருவரும் ஏற்கனவே ஒரு கஞ்சா வியாபாரி போதை பொருளுக்கு அடிமையாக்கி சிறுமியை பலாத்காரம் செய்த பிறகுதான் சடலத்தைக் கொண்டு அங்கு போட்டுள்ளனர் என்று அவர்கள் பெற்றோர் மிகவும் குமுறி அழுது உள்ளனர்,

Exit mobile version