Home NEWS மருத்துவமனை போகாமலே போய் சேர்ந்துடனும்…!!! சந்தோசம் நிம்மதி 10 % கூட இல்லை ரஜினிகாந்தின் உருக்கமான...

மருத்துவமனை போகாமலே போய் சேர்ந்துடனும்…!!! சந்தோசம் நிம்மதி 10 % கூட இல்லை ரஜினிகாந்தின் உருக்கமான பேச்சு.

superstar rajinikanth emotional speech in spiritual meeting

வாழ்க்கையில் 10% கூட நிம்மதி இல்லை என்று ரஜினி நேற்று உருக்கமாக பேசியது தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் கிரியா யோகா மூலம் இனிய வெற்றிகர வாழ்வு என்ற தலைப்பில் நடைபெற்ற தமிழாக்கம் செய்யப்பட்ட யோகதா சத்சங்க புத்தகத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வெளியிட்டிருந்தார்.

புத்தகத்தை வெளியிட்ட பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மேடையில் குருவே சரணம் என்று பேச்சைத் தொடங்கிய அவர்கள் என்னை பெரிய நடிகர் என்று சொன்னார்கள் அது பாராட்டா திட்டா என்று தெரியவில்லை நான் எத்தனையோ படங்கள் நடித்திருக்கிறேன் ஆனால் எனக்கு ஒரு ஆத்ம திருப்தி கொடுத்த திரைப்படம் என்றால் அது ராகவேந்திரா மற்றும் பாபா திரைப்படம் தான்.

இந்த இரண்டு திரைப்படங்களும் வராமல் இருந்தால் பல பேருக்கு தான் ஆக வேண்டும் பற்றி தெரிய வந்திருக்காது பாபா திரைப்படம் முடித்தவுடன் நான் இமயமலைக்கு சென்று விட்டேன் என்றெல்லாம் என்னை கூறினார்கள்.

இமயமலையில் சில மூலிகைகள் கிடைக்கும் அதனை சாப்பிட்டால் ஒரு வாரத்திற்கு நம் உடலுக்கு தேவையான விட்டமின்கள் உடலுக்கு கிடைக்கும் உடல் சுறுசுறுப்பாக இருக்கும் என்று கூறிய அவர் சொத்து சேர்த்து வைப்பதைவிட நோய் இல்லாமல் இருப்பது தான் முக்கியம்.

நோயாளியாக இருந்தால் பிறருக்கு கஷ்டம் சந்தோசமாக மருத்துவமனை செல்லாமலேயே நடமாடிக் கொண்டிருக்கும் போதே போய் சேர்ந்து விடனும் நான் இரண்டு தடவை மருத்துவமனை சென்று வந்துள்ளேன்.

பணம் புகழ் பெரிய அரசியல்வாதிகளைப் பார்த்தவன் நான் ஆனால் சந்தோஷம் 10% கூட இல்லை ஏனென்றால் சந்தோஷம் நிம்மதி நிரந்தரம் கிடையாது என்று தெரிவித்திருந்தார் ரஜினி உருக்கமாக பேசி இருந்தார்.

Exit mobile version