Home CINEMA NEWS சிவா மனசுல சக்தி ஹீரோயின்னா இவங்க…!!! ஆள் அடையாளம் தெரியாதபடி மாறிட்டாங்களே..!!!

சிவா மனசுல சக்தி ஹீரோயின்னா இவங்க…!!! ஆள் அடையாளம் தெரியாதபடி மாறிட்டாங்களே..!!!

siva manasula sakthi heroine anuya

அனுயா சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். அறிமுகமான முதல் படத்திலேயே யார் இந்த புது முகம் செம அழகா இருக்காங்களே என்று இளசுகளை புலம்ப வைத்தார்.

சிவா மனசுல சக்தி படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். சக்தி என்ற கதாபாத்திரத்தில் திமிரான பெண்ணாக நடித்து அசத்தி இருந்தார் முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களுடன் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அனுயா மதுரை சம்பவம், நகரம், நஞ்சுபுரம் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

ஷங்கரின் இயக்கத்தில் தளபதி விஜயின் நண்பன் திரைப்படத்தில் இலியானாவிற்கு அக்காவாக நடித்திருந்தார். என்னடா இது ஹீரோயின் மெட்டீரியல் இப்படி ஆயிட்டாங்க என்று நினைத்துக் கொண்டிருக்கையில் திடீரென்று தமிழ் திரையுலகில் பதற்றத்தில் உண்டாக்கிய சுசி லீக்ஸ் புகைப்படங்கள் வெளியானது அதில் அனுயா புகைப்படம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அனுயா தரப்பு அது அனுயாவே இல்லை என்று மறுத்தது.

தற்பொழுது அனுயா சில வெப் சீரிஸ் மற்றும் ஹிந்தி தொடர்களில் நடித்து வருகிறார். அனுயாவின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவங்கள சிவா மனசுல சக்தி ஹீரோயின் அனுயா என்று ஆச்சர்யப்பட்டு வருகின்றனர் அந்த அளவிற்கு ஆள் அடையாளம் தெரியாதபடி மாறிவிட்டார் அனுயா.

Exit mobile version