Home NEWS அரசுப்பள்ளியில் படித்து கல்லூரியில் பயில இருக்கும் மாணவியருக்கு சூப்பர் நியூஸ்…!!! இனி மாதந்தோறும் 1000 ரூபாய்...

அரசுப்பள்ளியில் படித்து கல்லூரியில் பயில இருக்கும் மாணவியருக்கு சூப்பர் நியூஸ்…!!! இனி மாதந்தோறும் 1000 ரூபாய் விவரம் உள்ளே.

penkalvi benifits for ladies

அரசுப்பள்ளியில் படித்து உயர் கல்வி பயில இருக்கும் மாணவியருக்கு சூப்பர் நியூஸ். அரசு பள்ளியில் 6ம் வகுப்பிலிருந்து 12 வகுப்பு வரை படித்து தங்களது உயர் கல்விக்கு அடியெடுத்து வைக்க இருக்கும் மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உயர்கல்வி உறுதித்தொகை வழங்கும் திட்டம் அமலுக்கு வந்து உள்ளது.

தொழில்நுட்பக் கல்வி, கலை மற்றும் அறிவியல் கல்வி இளநிலை (Under Graduate) பயிலும் மாணவியர்களுக்கான மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தினை செயல்படுத்த https://penkalvi.tn.gov.in என்ற முகவரியில் இணைய தளம் துவக்கப்பட்டுள்ளது.

மேற்காண் இணைய தளத்தில், இத்திட்டத்தில் பயன்பெறும் மாணவியர்களின் விவரங்களை 25.06.2022 ரன் முதல் 30.06.2022க்குள் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உடனடியாக அந்த இணைய தளத்தில் பதிவிடப்பட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தில் இணைய மாணவியர்கள் கீழ்க்கண்ட ஆவண நகல்களை கொண்டுவர அறிவுறுத்தல் வேண்டும்.

  1. ஆதார் நகல்,
  2. வங்கி கணக்கு புத்தக நகல்,
  3. பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல்,
  4. பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல்.

மாணவியர்கள் பதிந்திடும் தங்களின் அலைபேசி எண்ணிற்கு OTP அனுப்பப்படும் என்பதால், அலைபேசியை தவறாது கொண்டு வர வேண்டும்.

இத்திட்டத்தில் பயன்பெறும் மாணவியர்க்கு தகவல் அளித்து கல்லூரிக்கு வரவழைத்து தேர்வு நடைபெற்றாலும் தேர்வு முடித்த பிறகு (முற்பகல் அல்லது பிற்பகல்) இந்த விவரங்களை விரைந்து உள்ளீடு செய்தல் வேண்டும்.

இணைய வசதி உள்ள மாணவியர்கள் தாங்களாகவே தங்களது கைபேசி அல்லது கணினி வாயிலாக மேற்காண் இணைய முகவரியைப் பயன்படுத்தி தங்களது விவரங்களைப் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இதனை சம்மந்தப்பட்ட கல்லூரி முதல்வர்கள் உறுதி செய்து கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இத்திட்டத்தினை, தொழில்நுட்பக் கல்வி ஆணையர் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்குநர் அரசு / அரசு உதவி பெறும் / சுயநிதி கல்லூரி வாரியாக கண்காணித்து உடனுக்குடன் விவரங்கள் பதிவிடப்படுவதை உறுதி செய்து அனைத்து மாணவியர் விவரங்களும் 30.6.2022-க்குள் பதிவிடப்பட்டிருக்க வேண்டும்.

மேலும், ஒவ்வொரு நாளும் மாலை 5.00 மணிக்குள் கல்லூரி வாரியாக பதிவிடப்பட்ட மாணவியரின் எண்ணிக்கை குறித்த அறிக்கையினை தவறாது அரசுக்கு அனுப்ப வேண்டும்.

இன்று சமீபத்தில் வெளியிட்ட உயர்கல்வி துறை அறிக்கையில் இந்த விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்க பெயரை பதிவு செய்ய சிறப்பு முகாம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்கள் உயர்கல்விதுறை.

Exit mobile version