Home NEWS நிவர் புயலால் கல்பாக்கம் அணு உலைக்கு வரும் ஆபத்து என்ன..?

நிவர் புயலால் கல்பாக்கம் அணு உலைக்கு வரும் ஆபத்து என்ன..?

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, இந்த காற்றழுத்த தாழ்வு காற்றழுத்த மண்டலமாக மாறி தற்போது புயலாக உருவாகி தமிழகத்தை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது.

இந்த புயலுக்கு நிவர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் நாளை மாலை மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதனையடுத்து தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களில் இதற்கு தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது.

புயல் கரையை கடக்கும் வரை கல்பாக்கம் அணுஉலை ஊழியர்கள் குடும்பத்தினர் வெளியே வரவேண்டாம் என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் புதுச்சேரி இடையே கரையைக் கடக்க உள்ள கல்பாக்கம் பணியாளர்களுக்கு இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதனால் கல்பாக்கம் அணு உலைக்கு ஏதேனும் ஆபத்து வருமா என்றும் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Exit mobile version