Home NEWS வருத்தப்படாத வாலிபர் சங்கம் நடிகர் தவசி காலமானார்..!!!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் நடிகர் தவசி காலமானார்..!!!

actor thavasi dead

நடிகர் தவசி இவர் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் சூரியின் தந்தையாக நடித்திருப்பார். இவரது கதாபாத்திரம் அந்தப் படத்தில் அனைவரையும் கவர்ந்தது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் பிரபலமானவர் சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படத்திலும் நடித்திருந்தார்.

சில மாதங்களாக உணவுக்குழாயில் புற்றுநோய் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாமல் தவித்த தவசி உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் என்று பேட்டி ஒன்றை சமூகவலைத்தளத்தில் அளித்திருந்தார். அந்த வீடியோவை பார்த்த திரையுலக பிரபலங்கள் அனைவரும் தங்களால் முடிந்த அளவிற்கு உதவி செய்தனர்.

தவசியின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். கம்பீரமாக முறுக்கு மீசையுடன் இருந்த தவசி புற்றுநோயால் அவதிப்பட்டு உடல் மெலிந்து பரிதாபமாக காணப்பட்டார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர் புற்றுநோயிலிருந்து மீண்டு வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டனர். இந்நிலையில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று தவசி காலமானார்.

Exit mobile version