Home NEWS இன்று மாலைக்குள் தீவிர புயலாக மாறவுள்ளது நிவர் புயல்..!! வானிலை ஆய்வு மையம்...

இன்று மாலைக்குள் தீவிர புயலாக மாறவுள்ளது நிவர் புயல்..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தமிழகத்தின் அருகே வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்துள்ளது. தமிழகம் அருகே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது.

இந்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்து உள்ளதால் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புயலுக்கு நிவர் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் இன்று மாலைக்குள் தீவிர புயலாக உள்ளது.

இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற பகுதிகளில் கனமழை பெய்ய ஆரம்பித்து உள்ளது. நாளை பிற்பகலில் இவர் காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

மேலும் நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற பகுதிகளில் மின்சார விபத்துகள் எதுவும் நிகழாமல் இருக்க மின்சாரம் துண்டிக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

Exit mobile version