Home NEWS “வாழ்க்கைன்னா சிக்கல்.. ரோடுனா சிக்னல்” என தனது பேச்சால் மதுரை மக்களை ஈர்க்கும் போக்குவரத்துக்கு எஸ்ஐ...

“வாழ்க்கைன்னா சிக்கல்.. ரோடுனா சிக்னல்” என தனது பேச்சால் மதுரை மக்களை ஈர்க்கும் போக்குவரத்துக்கு எஸ்ஐ பழனியாண்டி…!!!

Madurai SP

மதுரை மாநகரில் மாட் டுத்தாவணி, மேலமடை சந்திப்பு மற்றும் ஆவின் சிக்னல்களில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டு வருபவர், போக்குவரத்து எஸ்ஐ பழனியாண்டி(55). இவர் பணியின்போது, பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் மைக்கில், அழகு தமிழில் கனிவாக பேசி வருகிறார். இதை சிலர் வீடியோ எடுத்து வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலத்த ளங்களில் வரைலாக்கி வருகின்றனர்.

பணியின்போது அவர் பேசியவகைளில் சில…:
ரோடுன்னா சிக்னல் இருக்கும்; மனிதன் என்றால் சிக்கல் இருக்கும்… குடும்பம்னா சண்டை இருக்கும்…. எல்லாத்தையும் விட்டுக்கொடுத்து போகணும்… அது தான் வாழ்க்கை…

எதுக்கும் கவலைப்படாதீங்க… இன்னைக்கு பிரச்னை வந்தால் நாளைக்கு நல்லாருப்போம். நம்பிக் கைதாங்க வாழ்க்கை.

வாழ்க்கையில் அம்மாக்கிட்ட, அப்பாக்கிட்ட விட்டு கொடுங்க… ஆனால், சம்சாரத்துக்காக காலம் பூராவும் விட்டுக் கொடுக்கனுங்க… அங்களை நாம கண் கலங்காம காப்பாத்தணும்…

வாங்கள்… பொறுமையா வாங்க… பொறுமையா போங்க… அப்போதான் வாழ்க்கையும், வாகன வசாரியும் நல்லா இருக்கும்….

ரைட்ல பாத்து முன்னேறி வாங்க… வசதியா வாழனும்னா. அசதியா உழைக்கனும்…. ஐயா. மூவ் பண்ணுங்க… ரிலாக்ஸா வாங்க…..இப்படி வாகன ஓட்டிகளிடம் கூறி வருவது அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம். திருப்புவனத்தை சேர்ந்த பழனியாண்டி கடந்த 29 ஆண்டுகளாக காவல்துறையில் பணியாற்றி வருகிறார். மதுரை மாநகர் போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த சின்ஹா, எஸ்ஐ பழனியாண்டியை நேரில் அழைத்து. பாராட்டி. புத்தகம் பரிசாக வழங்கினார்.

Exit mobile version