Home NEWS கலைஞருக்கு நினைவிடம் முதல்வருக்கு நன்றி..!!! என் தந்தை கலைஞரின் தீவிர பக்தர் வியப்படைய வைத்த OPS...

கலைஞருக்கு நினைவிடம் முதல்வருக்கு நன்றி..!!! என் தந்தை கலைஞரின் தீவிர பக்தர் வியப்படைய வைத்த OPS பேச்சு.

opaneerselvam welcomed kalaingar memorial plan

தமிழக அரசியல் வரலாற்றில் திமுக அதிமுக என்ற இரண்டு கட்சிக்கும் பெரிய பங்கு உண்டு. திமுகவை அன்போடு கட்டி ஆண்ட கலைஞர் கருணாநிதி அவர்களையும் யாராலும் மறக்க முடியாது அதுபோல அதிமுகவின் தூணாக இருந்து செயல்பட்ட ஜெயலலிதா அவர்களின் உழைப்பையும் மறந்துவிட முடியாது.

கலைஞர் கருணாநிதி அவர்களின் அன்பு மகன் ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராகி சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் இந்நிலையில் தன் தந்தைக்கு நினைவிடம் கட்ட வேண்டும் என்பதற்காக மெரினாவில் நினைவிடம் கட்டுவதற்கு வரைபடம் ஒன்றை வெளியிட்டிருந்தார் அதனைத் தொடர்ந்து கலைஞர் நினைவிடம் கட்டுவதற்கான நிதியையும் அறிவித்திருந்தார். 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி செலவில் கலைஞர் நினைவிடம் கட்டப்படும் என்று அறிவித்திருந்தார்.

கலைஞர் நினைவிடம் கட்டுவதற்கு முழுமனதோடு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ் கலைஞருக்கு நினைவிடம் என்று வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சருக்கு நன்றி வரலாற்றில் கலைஞரின் பெயர் நிலைத்து நிற்கும் முழுமனதோடு ஒரு மனதாக வரவேற்கிறோம் என்று கூறியதோடு 50 ஆண்டுகாலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கலைஞர் கருணாநிதி பல்வேறு சிறப்பு மிக்க சட்டங்களை கொண்டு வந்தவர்.

கலைஞருக்கு நினைவிடம் கட்டப்படும் என்ற அறிவிப்பை அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் மனதார வரவேற்க கடமைப்பட்டுள்ளோம் என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ் பேசியதுடன் என் தந்தை தீவிரமான கலைஞரின் பக்தர் அவருடைய பெட்டியில் மனோகரா, பராசக்தி கதைகள் இருக்கும் அவற்றை மனப்பாடமாக ஒப்பிக்க அவர் இல்லாத நேரத்தில் நாங்கள் எடுத்து படிப்போம் அவரின் வசனத்தில் அனல் பறக்கும் பின்னடைவில் உள்ள சமூகத்தை முன்னேற்ற அது எப்போதும் துணை நின்றுள்ளது என்று ஓபிஎஸ் கலைஞரைப் பற்றி புகழ்ந்து தள்ளியுள்ளார்.

எதிர்க்கட்சித் துணை தலைவராக இருந்தாலும் கலைஞர் அவர்களைப் பற்றி அவர் வெளிப்படுத்திய கருத்து அனைவரையும் வியப்படையச் செய்தது.

Exit mobile version