Home NEWS முன்பதிவு செய்தால் வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி போடப்படும்…!!! தமிழக அரசு அதிரடி உத்தரவு.

முன்பதிவு செய்தால் வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி போடப்படும்…!!! தமிழக அரசு அதிரடி உத்தரவு.

covid 19

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீட்டிற்கே சென்று கோவிட் தடுப்பூசி செலுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாந சுராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கோவிட் தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும். தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழக முதல்வர் மக்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் தமிழக அரசு கொரோனா தடுப்பூசிகளை அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் மற்றும் நடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் செலுத்தி வருகிறது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளன பாலூட்டும் பெண்கள் மற்றும் காசநோய் பாதித்தவர்களை பாதுகாக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை 25,14,228 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 10,54,704 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் என மொத்தம் 35,68.932 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. மேலும் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கடந்த 13ம் தேதி முதல் ஒரு வார காலத்தில் 315 கோவிட் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு 24 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து 80 வயதிற்கு மேற்பட்ட முத்த குடிமக்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தும் வகையில் அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்த தற்பொழுது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதளடிப்படையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்த 044-25384520 மற்றும் 044-46122300 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்தால் அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும்.

Exit mobile version