Home CINEMA NEWS உலகமே எதிர்பார்க்கும் பொன்னியின் செல்வன் படத்தில் கீர்த்தி இந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா…? வெளியான போஸ்டர்.

உலகமே எதிர்பார்க்கும் பொன்னியின் செல்வன் படத்தில் கீர்த்தி இந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா…? வெளியான போஸ்டர்.

keerthy suresh ponniyin selvan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் கீர்த்தி சுரேஷும் ஒருவர். முதலில் கமர்சியல் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வந்த கீர்த்தி தற்பொழுது நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

நடிகையர் திலகம் என்ற படம் இவருடைய நடிப்பை வேறொரு பரிமாணத்திற்கு கொண்டு சென்றதால் மக்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்தது. உடல் எடை குறைத்து படு ஸ்லிம்மாக மாறிய கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் படத்தின் ஒளிப்பதிவாளர் GK விஷ்ணு அவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டார்.

மாஸ்க் அணிந்து சேலை கட்டிக்கொண்டு வந்த கீர்த்தியின் அழகை பார்த்த ரசிகர்கள் பெண்ணே நீயும் பெண்ணா என்று பாடத் தொடங்கினார்கள் அந்த அளவிற்கு செம க்யூட்டாக இருந்தார் கீர்த்தி.

சில வருடங்களுக்கு முன்பு நகைச்சுவை நடிகர் சதீஷ் கீர்த்தி சுரேஷ் காதலிக்கிறார்கள் என்று செய்தி பரவியது அதன்பின் சமீபத்தில் அனிருத்தும் கீர்த்தி சுரேஷ் காதலிக்கிறார்கள் என்று செய்திகள் பரவத் தொடங்கியது உண்மை என்னவென்றால் சதீஷும், அனிருத் கீர்த்திக்கு நெருங்கிய நண்பர்கள்.

தற்பொழுது தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பிசியாக இருக்கும் கீர்த்தி . குந்தவை என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக நேற்று தகவல்கள் இணையத்தில் கசிந்தது. பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க மொத்த தமிழகமே ஆர்வத்துடன் இருக்கும் இந்த நேரத்தில் கீர்த்தி குந்தவை கதாபாத்திரத்தில் நடிப்பது தமிழ் ரசிகர்களுக்கு பெரிய சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கும் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது இந்நிலையில் கீர்த்தியின் குந்தவை லுக் வெளியாகி உள்ளதை பற்றி ஒரு சிலர் இடம் விசாரிக்க அது படத்தின் FAN MADE போஸ்டர். ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர் என்கிறார்கள்.

பொன்னியின் செல்வன் படத்தை இயக்கும் மணிரத்தினத்திற்கு மட்டும் தான் தெரியும் கீர்த்தி கதாபாத்திரம். விரைவில் படக்குழு அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version