Home NEWS வாழ்நாள் முழுவதும் தன் சம்பாதித்த பணத்தை கொரோனா நோயாளிகளுக்கு உதவ கொடுத்த மாற்றுத்திறனாளி..!!!

வாழ்நாள் முழுவதும் தன் சம்பாதித்த பணத்தை கொரோனா நோயாளிகளுக்கு உதவ கொடுத்த மாற்றுத்திறனாளி..!!!

person who donating 2 lakhs for covid vaccination

நாடெங்கும் கொரோனாவின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் படுவேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தாக்குதல் அதிகரித்துக்கொண்டு போகும் நிலையில் கொரோனாவின் மரணங்களும் தொடர்கிறது அதனால் இந்தியாவில் தடுப்பூசி மக்கள் போட்டுக் கொள்ளுங்கள் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும் மக்கள் தடுப்பூசி போடுவதில் சற்று தயக்கம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என கேரள அரசு அறிவித்திருந்தது அதற்கான செலவுக்கு பேரிடர் நிவாரண நிதிக்கு பலரும் பணம் அனுப்புகின்றனர்.

இந்த செய்தியை அறிந்து கொண்ட கண்ணூர் மாவட்டம் குருவா பகுதியை சார்ந்த ஜனார்த்தனன் என்ற மாற்றுத்திறனாளி ஒருவர் தன் வாழ்நாளில் சம்பாதித்து சேர்த்து வைத்திருந்த மொத்த பணத்தையும் அரசாங்கத்திற்கு நிதியாக அளித்துள்ளார்.

ஜனார்த்தனன் அவர்களுக்கு பிறவியிலேயே இரண்டு காதுகளும் கேட்காது அவர் பீடி சுற்றும் தொழிலை செய்து வருகிறார். தனக்குள்ள பல கஷ்டங்களைப் பொருட்படுத்தாமல் தன் நாட்டு மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தன் சம்பாதித்து வைத்திருந்த 2லட்ச ரூபாயை அரசுக்கு நிதி அனுப்பி உள்ளார். தற்பொழுது ஜனார்த்தனன் வாங்கி கணக்கில் ௮௫௦ ரூபாய் மட்டுமே உள்ளதாம்.

ஜனார்த்தனன் அவர்கள் இது குறித்து கூறுகையில் என் சகோதர சகோதரிகள் தடுப்பூசி போட்டுக் கொள்ள பணம் இல்லாமல் தவிக்கும் போது என் வங்கி கணக்கில் பணம் வைத்திருந்து என்ன பயன் என்று கூறியுள்ளார்.

பெருந்தன்மையான மனிதர்கள் இன்னும் இருப்பதால்தான் நம் நாடு இன்னும் தலை நிமிர்ந்து நிற்கிறது.

Exit mobile version