Home NEWS துரோகி கோழை என்று தன் கட்சியில் இருந்து ராஜினாமா செய்த மகேந்திரனை விமர்சித்த கமல்.!!! மக்கள்...

துரோகி கோழை என்று தன் கட்சியில் இருந்து ராஜினாமா செய்த மகேந்திரனை விமர்சித்த கமல்.!!! மக்கள் நீதி மய்யத்தில் சலசலப்பு..!!!

kamalahassan about mahendran

கமலஹாசன் மாறப்போவதில்லை என்று கூறிவிட்டு மக்கள் நீதி மய்யத்தை விட்டு விலகி கொண்ட மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் டாக்டர் மகேந்திரன் அவர்களை “கோழைகளை பற்றி நாம் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை” என்று கூறியுள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் தோல்வி கமலை மட்டும் அல்லாமல் தொண்டர்களையும் பெரிய அளவில் பாதித்தது யார் இந்த தோல்விக்கு காரணம் என்று அவர்களுக்குள்ளேயே சில நாட்களாக வாக்குவாதங்கள் சென்று கொண்டிருந்தது. சில மணி நேரங்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யத்தை விட்டு விலகுகிறேன் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார் மகேந்திரன் அதனைத் தொடர்ந்து தற்போது கமல் ஒரு அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

கமல் வெளியிட்ட அறிக்கையில் சீரமைப்பும் தமிழகத்தை எனும் பெரும் கனவை முன்வைத்து முதலாவது சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் ஒரு பெரிய போரில் திறம்பட செயல்பட்டோம்.

களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்து இருந்தார்கள் என்பதைக் கண்கூடாகக் கண்டோம் துரோகிகளை களையெடுங்கள் என்பது தான் அனைவரின் ஒருமித்த குரலாக இருந்தது அப்படி செய்ய வேண்டியவர்களின் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் டாக்டர் ஆர் மகேந்திரன்.

கட்சியில் ஜனநாயகம் இல்லை என்கிறார் ஜனநாயகமும் சமயங்களில் தோற்றுப் போகும் என்பதற்கு மிகப் பெரிய உதாரணம் தான் மகேந்திரன். முகவரி கொடுத்தவர்களின் முகங்களையே எடுத்துக் கொள்ளத் துணிந்தார்.

கட்சிக்காக உழைக்க தயாராக இருந்த பல நல்லவர்களை தலையெடுக்க விடாமல் செய்தது இவரது சாதனை நேர்மை இல்லாதவர்களும் திறமை இல்லாதவர்களும் வெளியேறும்படி மக்கள் நீதி மய்யத்தின் கதவுகள் திறந்தே இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.

தன்னுடைய திறமையின்மையும் நேர்மையின்மையும் தோல்வியையும் அடுத்தவர் மீது பழி போட்டு அனுதாபம் தேட முயற்சிக்கிறார் மகேந்திரன்.

தன்னை எப்படியும் கட்சியிலிருந்து நீக்கி விடுவார்கள் என்பதை தெரிந்து கொண்ட மகேந்திரன் புத்திசாலித்தனமாக கட்சியை விட்டு விலகி கொண்டார். ஒரு களையே தன்னை களையென்று புரிந்து கொண்டு தன்னைத்தானே நீக்கி கொண்டதில் உங்களைப் போல நானும் மகிழ்கிறேன் இனி நாம் கட்சிக்கு ஏறுமுகம்தான்.

என்னுடைய வாழ்க்கையில் அனைத்து விஷயங்களுக்கும் மேவெளிப்படையானவை நான் செய்த தவறுகளை மறைக்கவும் மறுக்கவும் ஒருபோதும் முயற்சித்தது இல்லை. என் சகோதர சகோதரிகளான மக்கள் நீதி மய்யத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கு மனம் தளர வேண்டாம் என ஆறுதல் சொல்ல வேண்டியதில்லை உங்களின் வீரமும் தியாகமும் ஊர் அறிந்தவை.

தோல்வியின் போது கூடாரத்தை பிய்த்துக்கொண்டு ஓடும் கோழைகளை பற்றி நாம் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. கொண்ட கொள்கையில் இருந்த பாதையில் சிறிது மாற்றம் இல்லை என்று கூறியுள்ளார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன்.

மகேந்திரன் அவர்களை துரோகி என்றும் கோழை என்றும் கூறியுள்ளார் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன்.

Exit mobile version