Home NEWS கமல்ஹாசன் மாறப்போவதில்லை மக்கள் நீதி மய்யம் கட்சியை விட்டு வெளியேறிய துணை தலைவர் மஹேந்திரன்..!!! காரணம்...

கமல்ஹாசன் மாறப்போவதில்லை மக்கள் நீதி மய்யம் கட்சியை விட்டு வெளியேறிய துணை தலைவர் மஹேந்திரன்..!!! காரணம் இது தான்.

mahendran resigned post from MNM party

தமிழக சட்டசபைத் தேர்தலில் கமலஹாசன் அவர்கள் தேர்தல் முடிவுகள் வெளியிடும் போது முதலில் கோவை தெற்கு பகுதியில் முன்னணியில் இருந்தார்.

இரவு 8 மணி தாண்டியும் அவரது தொகுதியில் வாக்கு எண்ணப்பட்டு வந்தது. அதிக வாக்குகளைப் பெற்று வந்த கமல்ஹாசனை திடீரென்று ஆயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்று பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் முன்னணியில் இருந்தார். யார் ஜெயிக்க போகிறார்கள் என்று பரபரப்பாக கடைசி நிமிடங்கள் முடிவுக்காக காத்திருந்தனர் மக்கள்.

பாஜகவினர் வந்துவிடக்கூடாது அதற்கு கமல் வரட்டும் என்று ஒரு பக்கம் மக்கள் நினைத்தார்கள். மற்றொரு பக்கம் வானதி ஸ்ரீனிவாசன் வரவேண்டுமென்று பாஜகவினர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். கடைசியில் பரபரப்புடன் முடிந்த தேர்தல் முடிவின் இறுதியில் வானதி சீனிவாசன் அவர்கள் வெற்றி பெற்றார். வாக்கு என்னும் அறையைவிட்டு ஒருவித பதற்றத்தோடு கமலஹாசன் வெளியே வந்தார். சில மணிநேரங்களில் கமலஹாசன் அவர்கள் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு ட்விட்டர் வழியாக வாழ்த்தினை தெரிவித்தார்.

இன்று நடந்து முடிந்த தேர்தலின் நிலைப்பாடுகள் பற்றியும் தேர்தல் நேரத்தில் வேட்பாளர்களின் செயல்கள் பற்றியும் மக்கள் நீதி மய்யம் கூட்டம் ஒன்று கமலஹாசன் தலைமையில் நடந்தது. அந்தக் கூட்டம் முடிந்தபின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் மகேந்திரன் அவர்கள் திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கமலின் நம்பிக்கைக்குரியவராகவும் பக்கபலமாக இருந்து கட்சியை வழிநடத்தி வந்த மகேந்திரன் அவர்கள் திடீரென்று மக்கள் நீதி மய்யத்தை விட்டு விலகுவதற்கு காரணத்தையும் கூறியுள்ளார்.

அதில் தலைவர் கமலஹாசன் தன்னிச்சையாக முடிவு எடுக்கிறார் அவரை முடிவு எடுக்க வைக்கிறார்கள் என்று கூறியுள்ளார். 2021 சட்டமன்ற தேர்தலில் தேர்தலில் கமலஹாசன் அவர்களை முதலமைச்சராக வேண்டும் என்ற கனவுடன் அனைவரும் பயணித்தோம் ஐபேக் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையும் நடத்தினோம் ஆனால் கமலஹாசனுக்கு நெருக்கப்பட்ட ஒரு முன்னாள் டிவி மீடியாவை சேர்ந்த மகேந்திரன் என்பவரின் ஆலோசனைப்படி சங்க்யா சொல்யூஷன்ஸ் என்கிற நிறுவனத்தை கட்சி ஆலோசனை நிறுவனமாக உருவாக்கினார்.

அந்த நிறுவனம் எந்தவித ஆலோசனையும் சரியாகக் கொடுக்கவில்லை செலவுகளை மட்டுமே உயர்த்திக் கொண்டு சென்றனர். இதைப்பற்றி நான் கமலஹாசன் அவர்களிடம் தெரிவித்தேன் அதற்கு சட்டமன்றத் தேர்தல் வரை மட்டுமே அவர்கள் பங்களிப்பு இருக்கும் அவர்களை நானே கண்காணிப்பின் என்று உறுதி அளித்தார்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட யார் வேட்பாளராக எந்தெந்த தொகுதியில் நிற்கப் போகிறார்கள் என்ற விவரங்களை கூட சரியாக சொல்லாமல் தாமத படுத்தினார்கள். கமலஹாசனுக்கு பிரச்சார வியூகங்களை வகுக்காமல் கட்சியில் உள்ள தொண்டர்கள் மீதும் நிர்வாகிகள் மீதும் ஏதாவது பழிசுமத்தி பிரிவினையை உண்டாக்கி கமலஹாசனை அணுகவிடாமல் செய்தனர்.

ஏன் இப்படி செய்கிறார்கள் என்று என்னுடைய வருத்தத்தை கமலஹாசனிடம் கூறியபோது கமலஹாசன் தேர்தலுக்குப் பிறகு அவர்களை வெளியேற்றி விடுவேன் என்று கூறியிருந்தார்.

கமல்ஹாசன் அவர்கள் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்டால் பெரிய அளவிலான வெற்றியாக இருக்கும் என்று எண்ணி எனது கருத்தை முன்வைத்தேன். அதுபோன்ற இடத்தில் கமல் போட்டியிட்டால் கட்சி சார்பாக போட்டியிடும் நிர்வாகிகளுக்கும் செயலர்களுக்கும் ஊக்கமாக இருக்கும் வெற்றி வாய்ப்பினை அதிகரிக்க செய்யும் என்று எனது கருத்தை தெரிவித்தேன்.

கமலஹாசன் அவர்கள் கோவை தெற்கு பகுதியில் போட்டியிடுகிறார் என்பதை தேர்தலுக்கு 4 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் அறிவித்தது சங்க்யா சொல்யூஷன்ஸ்.

சங்க்யா சொல்யூஷன்ஸ் தங்களது தவறுகளை மறைத்து கட்சியினர் மற்றும் செயலாளர்கள் தவறு செய்தது போல சித்திரித்து கமல்ஹாசனையும் நம்ப வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கட்சியின் இந்த தோல்விக்கு பிறகும் கமலஹாசன் அவர்கள் அணுகுமுறையில் இருந்து மாறுபட்டு செயல்படுவதாக எனக்கு தெரியவில்லை மாறிவிடுவார் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை இதனால் நான் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலக முடிவு செய்தேன்.

கமலஹாசன் அவர்கள் கொள்கையும் எளிய தொண்டர்களுக்கு தோழனாகவும் அவர் நல்ல தலைமைப் பண்புகளும் கொண்ட நம்மவராக மறுபடியும் மாறி செயல்பட வேண்டும் என்று வெளியே இருந்து வாழ்த்துகிறேன் என்று கூறி கட்சியை விட்டு விலகினார் கமலின் பெரிய நம்பிக்கையான டாக்டர் மகேந்திரன்.

Exit mobile version