Home NEWS பாட புத்தகத்துடன் அடக்கம் செய்யப்பட்ட ஸ்ரீமதியின் உடல்..!!! காண்போரை கண்கலங்க வைத்த சம்பவம்.

பாட புத்தகத்துடன் அடக்கம் செய்யப்பட்ட ஸ்ரீமதியின் உடல்..!!! காண்போரை கண்கலங்க வைத்த சம்பவம்.

kallakurichi school student srimathi last funeral

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீ மதியின் உடல் அவருடைய சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூரில் இன்று அடக்கம் செய்யப்பட்டது மாணவியின் உடலுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.

நிச்சயம் ஒரு நாள் நீதி கிடைக்கும் என மாணவியின் தாயார் உருக்கமாக பேசியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் உயிரிழந்த மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள அவரது பெற்றோர் நேற்று சம்மதம் தெரிவித்தனர்.

இதன்படி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலை இன்று காலை பெற்றோர் பெற்றுக்கொண்டனர். ஆம்புலன்ஸ் மூலம் போலீசார் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட நிலையில் எடை கல் காவல் நிலையம் முன்பு திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து தாமதமாக புறப்பட்ட AMBULANCE காவல்துறையின் முழு கட்டுப்பாட்டில் இருந்த மாணவியின் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது மூன்றடுக்கு பாதுகாப்புடன் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

பெரியநெசலூர் கிராமத்திற்குள் வெளியூர் நபர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது இதையடுத்து மாணவியின் வீட்டில் அவரது உடலுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

ஊரே திரண்டு வந்து இறுதிச்சடங்கு செய்தது காண்போரின் கண்கலங்க செய்தது.

முன்னதாக மாணவியின் உடலை எரிக்க திட்டமிட்ட நிலையில் மறு பிரேத பரிசோதனையை கருத்தில் கொண்டு புதைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இதை தொடர்ந்து நடைபெற்ற மாணவியின் இறுதி ஊர்வலத்தில் ஒட்டுமொத்த கிராம மக்களும் கலந்து கொண்டனர்.

அமைச்சர் கணேசன் திமுக எம்எல்ஏக்கள் வசந்தம் கார்த்திகேயன் உதயசூரியன் ஆகியோரும் இதில் பங்கேற்றனர். இறுதியாக மாணவி ஸ்ரீமதி பாடப் புத்தகத்துடன் வைத்து அடக்கம் செய்யப்பட்டது.

ஸ்ரீமதி புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டுள்ளாள் ஒருநாள் நிச்சயம் நியாயம் கிடைக்கும் ஸ்ரீமதி சாகல எல்லாரு மனசுளையும் வாழ்ந்துகிட்டு தான் சாமி இருக்கா என்று உருக்கமாக தெரிவித்தார் ஸ்ரீமதி தயார் .

இறுதி சடங்கில் பங்கேற்ற அமைச்சர் கணேசன் அவர்கள் பேசுகையில் ஏற்கனவே முதல்வர் அவர்கள் அறிக்கை வெளியிட்டு உள்ளார்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம் நிச்சயம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நல்ல நீதி கிடைக்கும் என்று கூறி உள்ளார்.

Exit mobile version