Home CINEMA NEWS பிரபல நடன இயக்குனர் சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி…!!! மருத்துவ செலவுக்கு உதவி கேட்கும் சிவசங்கரின்...

பிரபல நடன இயக்குனர் சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி…!!! மருத்துவ செலவுக்கு உதவி கேட்கும் சிவசங்கரின் இளையமகன்.

Siva Shankar

தமிழ் சினிமாவில் முன்னணி நடன இயக்குனராக தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர் கே.சிவசங்கர். இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப் படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதில் குறிப்பாக தனுஷ் நடிப்பில் வெளியான “திருடா திருடி” படத்தில் இடம்பெற்ற “மன்மத ராசா” என்ற பாடலின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

இவர் கடைசியாக பாகுபலி திரைப்படத்திற்கு நடனம் அமைத்து இருந்தார். அதோடு அஜித்தின் வரலாறு, கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்கு துட்டு 2 பரதேசி, தில்லுமுல்லு, அரண்மனை, சர்க்கார் போன்ற படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார்.

மேலும் நடன இயக்குனர் கே.சிவசங்கர் மற்றும் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. ஆகையால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிவசங்கர் மட்டுமின்றி அவரது மூத்த மகள், மனைவி ஆகியோரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவரது இளைய மகன் அஜய் கிருஷ்ணா உடனிருந்து குடும்பத்தினரை கவனித்து வருகிறார். சிவசங்கர் மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். 72 வயதான சிவசங்கர் ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது இளைய மகன் மருத்துவ செலவிற்கு பணம் இல்லை பணம் தந்து உதவுங்கள் என சமூக வலைத்தளங்கள் மூலம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

Exit mobile version