Home CINEMA NEWS மாநாடு திரைவிமர்சனம்.

மாநாடு திரைவிமர்சனம்.

சிலம்பரசன் படம் என்றாலே பல சர்ச்சைகள் தடைகள் இருக்கும் எப்போதும் வருவது வழக்கம் தான் ஆனால் மாநாடு படம் ஆரம்பத்திலிரந்து ஏகப்பட்ட தடைகளை சந்தித்து வந்தது மாநாடு படத்தின் பிரஸ் மீட்டில் கூட நிறைய பிரச்சனை கொடுக்கிறார்கள் என்று கண்கலங்கி அழுத சிம்பு பிரச்சினை எல்லாம் நான் பாத்துக்குறேன் ஆனா என்ன மட்டும் நீங்க பார்த்துக்கோங்க என்று உருக்கமாக பேசியிருந்தார்.

மாநாடு படம் வெளியாகாது என்று நேற்று மாநாடு படத்தின் தயாரிப்பாளரே பதிவிட்டிருந்தார் அதன் பின் கடைசி நிமிடங்களில் சில பிரச்சினைகளுக்கு பேச்சு வார்த்தை நடத்தி இன்று காலை ரிலீஸ் செய்தார்கள். மாநாடு எப்படி நடந்தது என்பதை வாருங்கள் பார்ப்போம்.

கதை:

தனது நண்பன் பிரேம்ஜி அவர்களின் காதலி திருமணத்தை நிறுத்துவதற்காக துபாயில் இருந்து கோயமுத்தூர் வருகிறார் சிம்பு. விமானம் மூலம் வரும் சிம்பு கோயமுத்தூரில் முதல்வரை கொல்ல முயற்சி செய்யும் சதித் திட்டம் நடைபெறுவதற்கு முன்பே சிம்புவிற்கு TIME LOOP ஆகி தெரியவருகிறது.

போலீசாக இருந்து கொண்டு முதல்வரை மாநாட்டில் கொலை செய்ய திட்டம் தீட்டும் எஸ்ஜே சூர்யாவிற்கும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது TIME LOOP வழியாக முன்கூட்டியே தெரிகிறது.

SJ சூர்யா வழியாக மாநாட்டில் நடக்க இருக்கும் வன்முறையை தடுத்து நிறுத்துவதற்காக சிம்பு என்னவெல்லாம் செய்கிறார் எப்படி எல்லாம் செய்கிறார் என்று சுவாரசியமாக சொல்லி இருக்கிறார் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு.

சிம்பு நீண்ட வருடங்களாக பெரிய வெற்றி கிடைக்காமல் பல சர்ச்சைகளில் மாட்டி தவித்த சிம்புவிற்கு இந்த படம் கேரியர் பெஸ்ட் படமாக ஆக அமைந்துள்ளது. சிம்புவின் RE -ENTRYக்கு சரியான தீனியாக இருந்தது இந்த படம். அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி கதைக்கு என்ன தேவையோ அதனை சிறப்பாக நடித்துக் கொடுத்துள்ளார் சிம்பு. பல இடங்களில் சிம்பு இந்த படத்திற்கு போட்ட உழைப்பு நன்றாகவே தெரிகிறது. இதுபோன்ற வித்தியாசமான படங்களை தான் சிம்புவிடம் இருந்து மக்கள் எதிர்பார்ப்பது.

வெங்கட் பிரபு இவருடைய படங்கள் என்றாலே கலகலப்பாக போகும் டைம் பாஸ் ஆகும் என்ற எண்ணம் ரசிகர்களிடம் எப்போதும் இருக்கும் வெங்கட்பிரபு அவர்களிடம் என்ன எதிர்பார்த்து ரசிகர்கள் வந்தார்களோ அதை தாண்டி மூன்று மடங்கு தரமான ஒரு படத்தை கொடுத்துள்ளார். மாநாடு படத்தைப் பொருத்தவரை கத்தியில் நடப்பது போன்ற கதை கொஞ்சம் மிஸ் ஆகி இருந்தாலும் இந்த படம் மொத்தமாக சொதப்பி இருக்கும் ஆனால் டைம் லூப் என்ற கான்செப்ட்டை புரியாதவர்களுக்கு புரியும்படி தனது காட்சி அமைப்புகளால் பெரிய வெற்றியை பெற்றுள்ளார் வெங்கட் பிரபு. மங்காத்தாவிற்கு பிறகு வெங்கட் பிரபுவின் தரமான படம் என்றால் கண்டிப்பாக மாநாடு இருக்கும்.

யுவன் சங்கர் ராஜா அது என்னவோ தெரியவில்லை யுவன் சிம்பு இணைந்தாலே அந்த படத்திற்கு மியூசிக் பெரிய ஹிட் ஆகிவிடும் இந்த படத்தில் ஒரே ஒரு பாடல் தான் ஆனால் படம் செல்லும் வேகத்திற்கு பின்னணியில் படுவேகமாக இசையமைத்துள்ளார் யுவன். யுவன் போடும் BGMக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது.

எஸ் ஜே சூர்யா தனுஷ்கோடி என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார் என்பதே உண்மை. மனுஷன் பின்னி பெடல் எடுக்கிறார். இவர் எவ்வளவு பெரிய இயக்குனர் என்று அனைவரும் அறிந்ததே ஆனால் அனைவரையும் தூக்கி சாப்பிடும் அளவிற்கு நடிப்பு அரக்கன் என்பதை இந்தப் படத்தில் நிரூபித்துவிட்டார் இதன்பின் ஏகப்பட்ட படங்களுக்கு SJ சூர்யா வில்லனாக நடித்தாலும் ஆச்சரியமில்லை.

எடிட்டர் பிரவீன் KL இந்தப்படத்தின் ரியல் ஹீரோ கான்செப்ட்டை கொஞ்சம் கூட போரடிக்காமல் ரசிகர்கள் ரசிக்கும் படி எடிட் செய்த விதம் வேற லெவல். தனது நூறாவது படத்தில் பெரிய ரிஸ்க் எடுத்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார். வாழ்த்துக்கள் சார்.

பிளஸ்

சிலம்பரசன் எனர்ஜி

SJ சூர்யா ஆக்ட்டிங்

வெங்கட் பிரபுவின் TIME LOOP கான்செப்ட்

எடிட்டர் பிரவீன்

மைனஸ்
எந்த குறையும் இல்லை

மொத்தத்தில் சிம்பு வெங்கட்பிரபு கூட்டணியில் மாநாடு முடிந்து பெரிய வெற்றியும் பெற்றுவிட்டது.

RATING : 4/5.


VERDICT : BLOCKBUSTER

Exit mobile version