Home NEWS பஸ் ஓட்டும்போது தீடீர் மாரடைப்பு 30 பயணிகளின் உயிரை காப்பாற்றிவிட்டு அரசு ஓட்டுநர் உயிரே இழந்த...

பஸ் ஓட்டும்போது தீடீர் மாரடைப்பு 30 பயணிகளின் உயிரை காப்பாற்றிவிட்டு அரசு ஓட்டுநர் உயிரே இழந்த சோகம்…!!!

Bus Conductor

கோபி அருகே உள்ள வெள்ளாங்கோயிலில் ஓடும் பஸ்சில் டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சமயோஜிதமாக பஸ்சை நிறுத்தி 30க்கும் மேற்பட்ட பயணிகளை காப்பாற்றி விட்டு அவர் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே மணியங்காட்டுரை சேர்ந்தவர் செல்வராஜ் (52) இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும் வினோதா (24) என்ற மகளும், விக்ராந்த் (21) என்ற மகனும் உள்ளனர். செல்வராஜ் கவுந்தம்பாடி அரசு போக்குவரத்து கழகத்தில் பஸ் டிரைவராக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு சென்ற செல்வராஜ் 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வெள்ளாங்கோயிலிலிருந்து பஸ்சை ஓட்டி வந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக செல்வராஜ் பஸ்சை சாலையோரம் நிறுத்திவிட்டு மயங்கி விழுந்தார். கண்டக்டர் கனகசபாபதி மற்றும் பயணிகள் செல்வராஜை பார்த்தபோது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. மாரடைப்பு ஏற்பட்ட போதும் சாமர்த்தியமாக நிறுத்தியதால் 30க்கும் மேற்பட்ட அவர்களின் உயிரை காப்பாற்றி விட்டார் என கூறி பயணிகள் கண் கலங்கினர்.

Exit mobile version