Home NEWS 21.1 கி.மீ தூர மராத்தான் போட்டியை 2.30 மணி நேரத்தில் கடந்த அமைச்சர் மா.சுப்ரமணியன்…!!!

21.1 கி.மீ தூர மராத்தான் போட்டியை 2.30 மணி நேரத்தில் கடந்த அமைச்சர் மா.சுப்ரமணியன்…!!!

Subramanian

ஓடலாம் நோயின்றி வாழலாம் என்ற நோக்கத்தை உணர்த்தும் வகையில் 129 ஆவது 21.1 கிலோ மீட்டர் தூரத்திற்கான மராத்தான் போட்டியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று 2.30 மணி நேரத்தில் ஓடி நிறைவு செய்தார். மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஓடலாம் நோயின்றி வாழலாம் என்ற நோக்கத்தை உணர்த்தும் வகையில் கொரோனா பேரிடர் காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலும் உடற்பயிற்சி, ஓட்டப் பயிற்சி, நடைபயிற்சி போன்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இன்று காலை 4:30 மணி அளவில் சென்னை கிண்டி லேபர் காலனிலிருந்து 129 மராத்தான் தொடங்கி அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் வழியாக காமராஜர் சாலை, மெரினா பீச் ரோடு, ரிசர்வ் பேங்க் வழியாக சென்று மெரினா கடற்கரையில் 21.1 கிலோமீட்டர் தூரத்தை இரண்டரை மணி நேரத்தில் ஓடி 7:30 மணிக்கு நிறைவு செய்தார்.

அப்போது அமைச்சர் சுப்பிரமணியன் நிருபர்களிடம் பேசியது கொரோனா பேரிடர் காலத்தில் உடற்பயிற்சி என்பது இன்றியமையாதது என்பதை உணர்த்தும் வகையில் 129வது 21.1 கிலோ மீட்டர் தூரத்திற்கான மராத்தான் போட்டியில் அதிகாலை துவங்கி காலை 7 : 30 மணி அளவில் நிறைவு செய்யப்பட்டுள்ளது. ஏறத்தாழ இரண்டு மணி நேரம் எட்டு நிமிடங்களில் 21.1 கிலோமீட்டர் தூரத்தை கடந்து இருக்கிறோம். இதுவரை 129 மராத்தான் போட்டியில் கலந்து கொண்டு உள்ளேன். இதில் வெளிநாடுகளில் மட்டும் 12 என்கின்ற வகையில் லண்டன், கத்தார், இத்தாலி, நார்வே, ஆஸ்திரேலியா என பல்வேறு வெளிநாடுகளிலும், இந்தியாவில் உள்ள 20 மாநிலங்களில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன்.

தற்போது லண்டன் விருச்சுவல் சேலஞ்ச் மராத்தான் போட்டியில் பங்கேற்று ஓடி வருகிறோம். இது லண்டன் மாநகரம் நடத்துகிற மராத்தான் போட்டி ஆகும். இதை அவர்கள் வேறு ஒரு காரணத்திற்காக நடத்துகின்றனர். ஆனால் எங்களைப் பொறுத்தவரை ஓடலாம் நோயின்றி வாழலாம் என்ற இலக்கை முன்நிறுத்தி இளைஞர்களிடையே உடற்பயிற்சிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடு மராத்தான் போட்டியை நிறைவு செய்துள்ளோம். டெங்குவால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒரே மாதத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை. கடந்த ஜனவரி மாதத்திலிருந்து பாதிக்கப் பட்டவர்கள்தான். சென்னையில் டிரோன் மூலம் மருந்து அடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தேவை 11.50 கோடி. ஆனால் ஒன்றிய அரசு இது 1 கோடி 60 லட்சம் மட்டுமே தந்துள்ளது. நேற்று 8 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது. இவற்றை இன்று போட முடிவு செய்துள்ளோம் இவ்வாறு அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

Exit mobile version