Home NEWS ஒரே குடும்பத்தை சேர்த்த 3 குழந்தைகள் கட்டிபிடித்தபடி கேரளா நிலச்சரிவில் இருந்து உடல்கள் மீட்பு…!!! சோகத்தில்...

ஒரே குடும்பத்தை சேர்த்த 3 குழந்தைகள் கட்டிபிடித்தபடி கேரளா நிலச்சரிவில் இருந்து உடல்கள் மீட்பு…!!! சோகத்தில் மக்கள்.

landslide

கேரளாவில் கனமழை காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளத்தில் மிதக்கின்றன. நிலச்சரிவில் புதைந்து 30 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. இதனிடையே நாளை முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் கேரள மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர்.

இடுக்கி மாவட்டம், கொக்கையார் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 7 பேர் மண்ணில் புதைந்தனர். இவர்களில் சியாத் என்பவரின் மனைவி பவுசியா(28), அவரது மகன் அமீன்(10), மகள் அம்னா(7), தவுசியாவின் அண்ணன் பைசலின் மகள் அப்சானா(8), மகன் அசியான்(4) உட்பட 6 பேர் உடல்கள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டன.

உடல்களை மீட்கும் போது அமீன், அம்னா, அப்சானா ஆகிய 3 பேரும் கட்டிபிடித்தபடி இறந்து கிடந்தனர். நேற்று 3 வயது சிறுவன் உடல் மீட்கப்பட்டது. இங்கு 7 பேர் மட்டுமே சிக்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மீட்பு பணி நிறுத்தப்பட்டது. இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது. கொக்கையார் நிலச்சரிவில் பவுசியா மற்றும் அவரது 2 குழந்தைகளும் இறந்தனர்.

நிலச்சரிவு ஏற்படுவதற்கு ஒரு சில நிமிடங்கள் முன்பாக வீட்டின் அருகே கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை பவசியா தனது செல்போனில் வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த சம்பவம் நடந்த ஒரு சில நிமிடத்திற்குள் பவுசியாவும் அவரது குடும்பத்தினரும் நிலச்சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version