Home NEWS அனைவரும் ஹிந்தி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.. சோமேடோ அளித்த பதிலால் கொந்தளித்த தமிழக மக்கள்…!!!

அனைவரும் ஹிந்தி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.. சோமேடோ அளித்த பதிலால் கொந்தளித்த தமிழக மக்கள்…!!!

zomato

இந்தியாவின் தேசிய மொழி ஹிந்தி அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று சொமேட்டோ அளித்த பதில் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உணவு டெலிவரி செய்யும் சோமேடோ நிறுவனம் தற்போது மாபெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

தமிழ்நாட்டை சேர்ந்த விகாஸ் என்ற இளைஞர் சோமேடோ வில் உணவு ஆர்டர் செய்துள்ளார். அவர் ஆர்டர் செய்த உணவு முழுமையாக வரவில்லை. இப்படி நான் செய்த ஆர்டர் சரிவர வரவில்லை என்றால் நமக்கு வந்த உணவை பற்றி சோமேடோ சாட் பாக்ஸில் புகார் தெரிவிக்கலாம். அதற்கான சரியான ஆதாரத்தை சமர்ப்பிக்கும் பட்சத்தில் பணத்தை ரீபண்ட் செய்வார்கள் அல்லது அதற்கான குறிப்பிட்ட தொகையை மீண்டும் வழங்குவார்கள்.

இந்நிலையில் அப்போது விகாஸ் சோமேடோ நிறுவனத்தின் கஸ்டமர் கேர் சாட் பாக்ஸில் புகார் தெரிவித்தார். அவருடன் பேசிய கஸ்டமர் கேர் நபர் ரீபண்ட் கொடுக்க மறுத்துவிட்டார். நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவதால் எங்களால் விபரங்கள் சரியாக தெரிவிக்க முடியவில்லை என சோமேடோ தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு தமிழ்நாட்டில் சேவை செய்யும் போது தமிழில் பேசுபவர்களை வேலைக்கு வைக்க வேண்டியதுதானே என தெரிவித்துள்ளார். டுவிட்டரில் பலரும் சோமேடோ நிறுவனத்திற்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். அதோடு #Reject Zomato என்ற hashtag மூலம் பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version