Home CINEMA NEWS நடிகை அனுஷ்காவிற்கு பாலியல் தொல்லை கொடுத்த தயாரிப்பாளர்..!!! நீண்ட வருடங்களுக்கு பிறகு உண்மையை உடைத்த அனுஷ்கா..!!!

நடிகை அனுஷ்காவிற்கு பாலியல் தொல்லை கொடுத்த தயாரிப்பாளர்..!!! நீண்ட வருடங்களுக்கு பிறகு உண்மையை உடைத்த அனுஷ்கா..!!!

anushka open talk about metoo

நடிகை அனுஷ்கா தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர் மாதவனின் ரெண்டு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அந்தப் படத்தில் இடம் பெற்ற மொபைலா மொபைலா என்ற பாடல் அனுஷ்காவின் மொத்த அழகையும் வெளிப்படுத்தி ரசிகர்களை கிறங்க அடித்தது.

அனுஷ்கா தமிழிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார் ஏகப்பட்ட தமிழ் பட வாய்ப்புகள் இவருக்கு குவிந்தது. அதேபோல தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து அதிக ரசிகர்களை தன் வசம் வைத்திருந்தார். அரேபியன் குதிரை என்று தான் சினிமா வட்டாரத்தில் அனுஷ்காவை அழைப்பார்களாம் அந்த அளவிற்கு கனகச்சிதமாக உடம்பை வைத்திருந்த அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை கூட்டினார்.

அந்தப் படத்திற்காக தனது உடல் எடையை கூட்டி குண்டாக காண பெற்றார். ஒரு படத்திற்காக அனுஷ்கா மெனக்கெடுவது பார்த்து அனைவரும் பாராட்டி வந்தார்கள் ஆனால் அந்த படம் ரிலீஸ் ஆன பின் படம் பார்த்த ரசிகர்கள் அனுஷ்கா இந்த படத்திற்கு இவ்வளவு ரிஸ்க் எடுத்து இருக்க வேண்டாமே என்று கூறி வந்தார்கள். படமும் சொல்லும் அளவிற்கு இல்லாததால் நொந்துபோன அனுஷ்கா மறுபடியும் தனது உடலை மெலிதாக்க யோகா செய்து வந்தார். யோகா செய்து தனது உடலை குறைத்து விடலாம் என்று எண்ணி கடினமான உடற்பயிற்சிகள் செய்து வந்தார் ஆனால் அவருடைய உடல் பழையபடி கட்டுக்கோப்பாக வராமல் போனது.

அனுஷ்காவின் உடல் வாகு தான் அவருடைய பெரிய பிளஸ் ஆனால் தற்பொழுது அவருடைய உடல் கட்டுக்கோப்பாக இல்லாமல் ஊதிப் போய் இருப்பதால் நிறைய பட வாய்ப்புகளை இழந்தார்.

Anushka Shetty Images in Rudramadevi

இந்நிலையில் MeeToo பற்றி சில மாதங்களுக்கு முன்பு வாய்திறந்து உள்ளார் அனுஷ்கா. சினிமாவில் பாலியல் தொல்லை இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். என்னிடமே ஒரு தயாரிப்பாளர் நீங்கள் என் படத்தில் நடிக்க வேண்டும் கூறியவர் புகழ ஆரம்பித்தார் அதன்பின் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாமா என்று கேட்டார் நான் கையெடுத்து கும்பிட்டு நான் நடிக்க வந்திருக்கிறேன் படுக்க வரவில்லை என்று தெளிவாக கூறி விட்டேன் எனக்கே இதுபோல தொந்தரவுகள் வந்தபோது புதிதாக சினிமாவுக்குள் நுழைய இருக்கும் நடிகைகளுக்கு இது போன்ற தொல்லைகள் இல்லாமல் இருக்காது.

சினிமாவில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் இதுபோன்ற பாலியல் தொல்லைகள் இருந்து வருகிறது அதிலிருந்து நாம் எப்படி மீள என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்று அனுஷ்கா கூறியுள்ளதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Exit mobile version