Home NEWS ஏழைகளுக்கு ஒரு ரூபாய்க்கு சொந்த வீடு அசத்தும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ..!!!

ஏழைகளுக்கு ஒரு ரூபாய்க்கு சொந்த வீடு அசத்தும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ..!!!

andhra cm jagan mohan reddy

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். இவர் கொண்டுவரும் திட்டங்கள் மக்களுக்கு உபயோகமாக இருப்பதால் மக்கள் அவருக்கு வரவேற்புக் கொடுத்து வருகிறார்கள். தற்பொழுது நவரத்தினங்கள் எனும் ஒன்பது முக்கிய திட்டங்களை தேர்தல் வாக்குறுதியாக வழங்கினார். ஏழைகளுக்கு இலவச மருத்துவம் கல்வி விவசாய கடன் வேலைவாய்ப்பு பூரண மதுவிலக்கு உள்ளிட்ட திட்டங்கள் அடங்கியுள்ளது.

ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அந்த வாக்குறுதிகளில் உள்ள ஒவ்வொரு திட்டத்தையும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி செயல்படுத்தி வருகிறார் அதில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்மார்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் ஆண்டுக்கு 15 ஆயிரம் பணம் செலுத்தப்பட்டு வருகிறது.

பெண்கள் பெயரிலேயே இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க படுகிறது.

விண்ணப்பித்த 90 நாட்களுக்குள் பட்டா வழங்குமாறு முதல்வர் ஜெகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளதால் ஏழைகள் அனைவரும் இலவசமாகப் பெற்று வருகின்றனர்.

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூபாய் 10,000 தள்ளுவண்டி மூலம் வாழ்க்கையை நடத்துபவர்களுக்கும் ரூபாய் பத்தாயிரம் என அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

தற்பொழுது ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளன அதில் நகர்புறத்தில் பசிக்கும் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்கு டிட்கோ நிறுவனம் மூலமாக அரசு இலவச வீடுகளை கட்டித் தருவது என்றும் அதில் 300 சதுர அடிக்குள் இருக்கும் ஏழைகளுக்கு ஒரு ரூபாய்க்கு வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version