Home NEWS மை இந்தியா புதிய கட்சியை தொடங்கிய தொழிலதிபர்..!!! விவசாய கடனை தள்ளுபடி செய்வோம்..!!! இலவச மருத்துவோம்...

மை இந்தியா புதிய கட்சியை தொடங்கிய தொழிலதிபர்..!!! விவசாய கடனை தள்ளுபடி செய்வோம்..!!! இலவச மருத்துவோம் கொடுப்போம் என்று அறிவிப்பு..!!!

my inida party anil kumar

தேர்தல் நெருங்கும் நேரத்தில் நாளுக்கு நாள் கட்சிகளும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்தத் தேர்தலில் புதிய கட்சிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நடிகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் கட்சி தொடங்கி இந்த தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளனர்.

மை இந்தியா என்ற பெயரில் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் அனில் குமார் என்பவர் புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்த அனில்குமார் மதுரையில் தனது தேர்தல் சுற்றுப் பயணத்தை தொடங்கினார். நேற்று நடந்த கட்சி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு மாலை அங்கு உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருக்கிறார்.

மை இந்தியா கட்சியின் தலைவர் அனில் குமார் பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது அவர் கூறியது தமிழகம் எனது தாய் வீடு இங்கிருந்து எனது அரசியல் பயணத்தை தொடங்க இருக்கிறேன். இங்கு பெரிய கட்சிகள் இருந்தாலும் எங்களுக்கு மக்கள் இருக்கிறார்கள். அதுபோல பிரதமர் மோடி நல்ல திட்டங்களை கொண்டு வந்தாலும் நடைமுறைப்படுத்துவதில் பூஜ்ஜியம் என்று கூறிய அவர் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு ஒரு பைசா கூட சுங்க கட்டணம் வசூலிக்க மாட்டோம்.

விவசாயிகளின் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்வோம் 65 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூபாய் 5000 மாத உதவித்தொகை வழங்கும் LKG முதல் 12-ஆம் வகுப்பு வரை இலவச கல்வி கொடுக்கும் மகளிருக்கு பேருந்து கட்டணம் இலவசமாக அளிப்போம். தொழில் தொடங்க கடன் பெரும் சுய உதவிக் குழுவினருக்கு ரூபாய் ஐந்தாயிரம் வரை தள்ளுபடி செய்யப்படும்.

அதனை தொடர்ந்து இலவச மருத்துவம் ரூபாய் 2 லட்சத்து ஆயுள் காப்பீடு ரூபாய் 10 லட்சத்துக்கான விபத்து காப்பீடு வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் பள்ளிகளில் ஜாதி மத இனம் குறித்த தகவல் அளிப்பது கட்டாயமாக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.

மக்கள் நிச்சயம் எங்களை ஆதரிப்பார்கள் எங்கள் கட்சியின் வேட்பாளர்கள் யார் என்பதை ஆலோசித்து விட்டு நாங்கள் கூறுகிறோம். ஊழலை கண்காணிக்க சிசிடிவி கேமரா பெற்று உள்ளோம் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே தமிழ்நாட்டில் கட்சிகள் எண்ணிக்கை அதிகம் இருக்க தொழிலதிபர் ஒருவர் கட்சி தொடங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தாலும் யாராச்சும் நல்லது செய்ய மாட்டார்களா என்று எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் தமிழக மக்கள்.

Exit mobile version