Home NEWS மக்களுக்கு மருத்துவ சேவை செய்து வந்த 8 மாத கர்ப்பிணி அரசு மருத்துவர் சண்முகபிரியா கொரோனவால்...

மக்களுக்கு மருத்துவ சேவை செய்து வந்த 8 மாத கர்ப்பிணி அரசு மருத்துவர் சண்முகபிரியா கொரோனவால் பரிதாபமாக உயிர் இழந்தார்..!!! கலங்கி நிற்கும் குடும்பத்தினர்.

8 Month Pregnant Madurai doctor shanmugapriya died by corona

கொரோனா என்ற கொடிய நோய் பாரபச்சம் பார்க்காமல் மக்களைத் தாக்கி வருகிறது தினந்தோறும் தனக்கு நெருக்கமான சொந்தங்களை இழந்து தவித்து வருகிறார்கள் மக்கள். கொரோனா நோயிலிருந்து மக்களை பாதுகாக்க மருத்துவர்கள், செவிலியர்கள் ஓயாமல் பாடுபட்டு வருகின்றனர்.

பலரது குடும்பத்தை காப்பதற்காக தங்களின் குடும்பத்தை மறந்து மருத்துவர்கள் தங்களின் உயிரைப் பற்றிக்கூட கவலைப்படாமல் மக்களுக்கு சேவையாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் மதுரையை சார்ந்த டாக்டர் சண்முகப்பிரியா என்பவர் நோயாளிகளுக்கு மருத்துவ சேவை செய்து வந்துள்ளார். அரசு மருத்துவரான சண்முகப்பிரியா சின்னமனூர் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார்.

திடீரென்று இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அப்போது சண்முகப்பிரியா அவர்களின் நுரையீரல் 90% பாதிக்கப்பட்டுள்ளதை கண்டறிந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை கொடுத்து வந்தார்கள்.

8 மாத கர்ப்பிணியாக இருந்த டாக்டர் சண்முகப்பிரியா கொரோனாவால் பரிதாபமாக நேற்று மாலை 4 மணி அளவில் உயிரிழந்துள்ளார்.

கர்ப்பிணியாக இருப்பதால் தடுப்பூசி போடவில்லை என்று தெரிவித்துள்ளார்கள் மருத்துவர்கள்.

இந்த கடினமான நேரத்திலும் மக்களுக்கு சேவை செய்து வந்த டாக்டர் சண்முகப்பிரியா அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version