Home NEWS IT நிறுவனத்தையே மிஞ்சும் அளவிற்கு உள்ள ஆசியாவிலே மிக பெரிய நூலகத்தை பராமரிக்காமல் சீரழித்த அதிமுக..!!!...

IT நிறுவனத்தையே மிஞ்சும் அளவிற்கு உள்ள ஆசியாவிலே மிக பெரிய நூலகத்தை பராமரிக்காமல் சீரழித்த அதிமுக..!!! ஆய்வில் பார்த்து வருத்தப்பட அமைச்சர்.

anbil magesh visits anna centaury library chennai

கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட மாபெரும் நூலகத்தை இன்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்தார்.

அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை பார்த்த அவர் நூலகத்தின் நிலைமையை பார்த்து நொந்து போனார் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு எல்லா நூலகங்களிலும் சீரழித்தது போலவே தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கிய ஆசியாவின் மிகப் பெரிய நூலகமான இந்த அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை முழுமையாக சீரழித்து உள்ளார்கள். இனி அது பற்றி பேசி பயனில்லை.

அறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் மட்டுமல்ல தமிழகத்தில் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அத்தனை நூலகங்களும் கூடிய விரைவில் சீரமைக்கப்பட்டு அடுத்த தலைமுறையினர் இளைஞர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார் அன்பில் மகேஷ்.

ஆடிட்டோரியம், கலந்துரையாடல் அறை, புத்தகம் வெளியிடும் அறை போன்ற வசதிகள் இந்த நூலகத்தில் உள்ளது. பார்வை இல்லாதவர்கள் செவி வழியாக புத்தகங்களை படிக்கும் டெக்னாலஜி இந்த நூலகத்தில் இருந்தது. பிரம்மாண்டமான அறைகள் மற்றும் புத்தகங்களை அமர்ந்து படிக்கும் இடங்கள் என்று பார்க்கவே அழகாக IT நிறுவனம் போல இருந்த நூலகத்தை சரியாக பராமரிக்காதது மக்களிடம் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

நூலகத்தின் தற்போதைய நிலையை பார்த்த அமைச்சர் அன்பில் மகேஷ் விரைவில் இந்த நூலகத்தை சீரமைத்து தருகிறோம் என்று கூறி உள்ளார்.

Exit mobile version