Home NEWS மூடநம்பிக்கையின் உச்சம்..!! அம்மாவாசை அன்று இறந்தால் மோட்சம் என எண்ணி 3 இளைஞர்கள்...

மூடநம்பிக்கையின் உச்சம்..!! அம்மாவாசை அன்று இறந்தால் மோட்சம் என எண்ணி 3 இளைஞர்கள் செய்த செயல்..!!

மூடநம்பிக்கைகள் தற்போது உள்ள நவீன காலத்திலும் இருந்துதான் வருகின்றது. ஆல மரத்தின் உச்சியில் பேய் தூங்கும், பூனை குறுக்கே சென்றால் சென்ற காரியம் விலகாது என தற்போது வரை பல மூட நம்பிக்கைகள் இருந்து வருகின்றன. அதுபோல ஒரு மூட நம்பிக்கை காரணமாக மூன்று இளைஞர்கள் தன் உயிரை மாய்த்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஷாகபூர் என்ற பகுதியில் மூன்று இளைஞர்கள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது 3 நாட்களுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது, இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த போலீஸ் அதிகாரிகளுக்கும் திடுக்கிடும் தகவல் ஒன்று கிடைத்தது.

இந்த மூன்று இளைஞர்களும் அம்மாவாசை அன்று மரணம் அடைந்தால் நேரடியாக மோட்சம் கிடைக்கும் என்று மூட நம்பிக்கை காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளனர். தற்கொலை முயற்சிக்கு மொத்தம் நான்கு பேர் முயன்றதாகவும் கடைசி நேரத்தில் ஒருவர் மட்டும் முடிவை கைவிட்டு தூக்கில் தொங்காமல் தப்பித்து விட்டதாகவும் இவரின் மூலம்தான் இந்த விஷயங்கள் தெரிய வந்தது என கூறப்படுகின்றது.

தற்கொலை செய்வதற்கு முன் இந்த மூன்று பேரும் மரத்தின் கீழே அமர்ந்து மது அருந்திவிட்டு இதன் பிறகு தங்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்த சேலைகளில் தூக்கில் தொங்கியது தெரியவந்துள்ளது. இருப்பினும் இந்த மரணங்கள் சந்தேக மரணம் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அம்மாவாசை என்று இறந்தால் நேரடியாக மோட்சம் கிடைக்கும் என்ற மூடநம்பிக்கை நம்பி மூன்று இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் மிகவும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version