Home NEWS கோவிலில் லிப்லாக் காட்சி..!!! கொந்தளித்த பாஜகவினர்.

கோவிலில் லிப்லாக் காட்சி..!!! கொந்தளித்த பாஜகவினர்.

netflix a suitable boy

NETFLIX பல தொடர்களை தயாரித்து பிரபலப்படுத்தி பணம் சம்பாதிக்கும் ஒரு OTT தளம். நெட்பிளிக்ஸ் பயனாளிகள் வெப் சீரிஸ் பார்ப்பதற்காகவே அதிக தொகை என்றாலும் பரவாயில்லை என்று பணம் செலுத்தி OTT தளத்தை விரும்பி பார்த்து வருகின்றனர்.

பொதுவாக OTT தளங்களில் சற்று வரம்பு மீறிய காட்சிகள், கவர்ச்சி காட்சிகள் கொண்ட வெப்சீரிஸ் பிரபலமடைந்து வருகிறது. அந்த வகையில் A Suitable Boy என்ற வெப்சீரிஸ் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஒரு கோவிலில் இந்து மதத்தைச் சார்ந்த பெண்ணை காதலிக்கும் முஸ்லிம் மதத்தைச் சார்ந்த ஒருவர் லிப் லாக் அடிப்பது போல் ஒரு காட்சி அந்த வெப்சிரிஸில் இடம்பெற்றது.

அந்தக் காட்சியை பார்த்த பாஜகவினர் புனித தளத்தில் எப்படி இது போன்று காட்சி அமைக்கலாம் இது இந்து மதத்தை கலங்கப்படுத்துவதற்கு சமம். நெட்ப்ளிக்ஸ் பெரிய தவறு செய்து விட்டார்கள் அவர்களை மன்னிக்கவே முடியாது. இந்த காட்சியை வெளியிட்ட நெட்பிளிக்ஸ், தயாரித்த தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர் ஆகியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

மேலும் இந்த OTT தளம் கடவுள் மற்றும் கடவுள் சார்ந்த இடத்தை இப்படி கொச்சைப்படுத்தினால் அந்த தளத்தின் மீது Section 295A of IPC சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Exit mobile version