Home NEWS எந்த நேரத்தில் சூறாவளி சுழட்டி அடிக்கும் தெரியுமா..? தமிழகத்தில் எந்த பகுதிக்கு மிகவும் ஆபத்து..?

எந்த நேரத்தில் சூறாவளி சுழட்டி அடிக்கும் தெரியுமா..? தமிழகத்தில் எந்த பகுதிக்கு மிகவும் ஆபத்து..?

தற்பொழுது தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை மட்டுமல்லாது புயல் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலின் மத்தியப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து இதன் பின்பு ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.

இது பின்னர் புயலாக மாறும் என்றும் கூறப்பட்டுள்ளது என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் நவம்பர் 25ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் இடையே கரையை கடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது .

25ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் போன்ற பகுதிகளில் மிகவும் கனமழை இருக்கும். சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் புயல் காரணமாக கனமழை பெய்யும், பொதுமக்கள் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்று தமிழக கடலோரப் பகுதியில் சூறாவளி காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள் சூறாவளி காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையில் 75 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version