Home NEWS பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி காப்பாற்றிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இளைஞன் உயிரிழப்பு…!!!

பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி காப்பாற்றிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இளைஞன் உயிரிழப்பு…!!!

police

சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மயங்கி கிடந்த அவரை காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தன் தோளில் சுமந்து மயங்கி கிடந்த நபரை மருத்துவமனையில் அனுப்பி வைத்த சம்பவம் மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியின் சேவையை கேள்விப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து தாழ்வான இடங்களில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

பல இடங்களில் மழை நீர் தேங்கியதால் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகளில் உள்ள மரங்கள் சாய்ந்தன. இதனிடையே பேரிடர் மீட்பு குழுவினர் பல்வேறு இடங்களுக்கு சென்று மக்களை பாதுகாப்பாக மீட்டு முகாம்களில் தங்க வைத்து வருகின்றனர். மேலும் முழுவீச்சில் வீடுகளில் புகுந்த தண்ணீரை வெளியேற்ற ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

நேற்று சென்னையில் அண்ணாநகர் பகுதியில் மரம் விழுந்ததில் உதயா என்ற நபர் இடிபாடுகளில் சிக்கி கொண்டார். சிக்கிய நபர் இறந்து விட்டார் என கருதிய நிலையில் அப்போது தகவலறிந்து வந்த இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அவரை தனது தோளில் சுமந்து உடனடியாக ஆட்டோவில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நபருக்கு இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Exit mobile version