Home NEWS முதல் நாள் ICUவில் சிகிச்சை, மறுநாள் போட்டியில் அரைசதம், ரிஸ்வானின் அர்ப்பணிப்பை கண்டு வியர்த்த ரசிகர்கள்…!!!

முதல் நாள் ICUவில் சிகிச்சை, மறுநாள் போட்டியில் அரைசதம், ரிஸ்வானின் அர்ப்பணிப்பை கண்டு வியர்த்த ரசிகர்கள்…!!!

mohammed rizwan

துபாயில் நடைபெற்று வரும் T20 உலகக்கோப்பை போட்டியில் நேற்று பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இடையே அரை இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 176 ரன்கள் எடுத்து இரண்டாவதாக களமிறங்கிய ஆஸ்திரேலியா 19 ஓவர்களில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த டி20 தொடர் முழுவதும் பாகிஸ்தான் அணி மிகவும் பலம் வாய்ந்த அணியாக விளங்கியது. அரை இறுதிக்கு முன் ஐந்து போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரான முஹம்மது ரிஸ்வான் 67 ரன்கள் குவித்து அணிக்கு வலிமை சேர்த்தார். மேலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டும் என பாகிஸ்தான் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருந்தனர் ஆனால் போட்டியில் தோல்வி அடைந்ததால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

பாகிஸ்தான் அணி ஆட்டத்தில் தோற்றபோது தொடக்க ஆட்டக்காரரான முஹம்மது ரிஸ்வான் பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அதற்கு காரணம் நேற்றைய ஆட்டத்திறகு முதல் நாள் ஐசியூவில் சிகிச்சை பெற்று இருந்தார் ரிஸ்வான். ஆனால் செவ்வாய்க்கிழமை துபாயில் உள்ள மருத்துவமனையில் ஐசியு பிரிவு சுவாச குழாயில் ஏற்பட்ட தீவிர தொற்றின் காரணமாக இரண்டு நாட்கள் ஐசியூவில் இருந்து சிகிச்சை பெற்று இருந்தார்.

ரிஸ்வான் நேற்று காலை தான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த சூழ்நிலையில் நேற்று பாகிஸ்தான் அணிக்காக போட்டியில் களம் இறங்கினார். இந்த போட்டியில் 67 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது இந்த முயற்சிக்கு அனைத்து தரப்பினராலும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version