Home CINEMA NEWS லெஜெண்ட் பட விழாவிற்கு கவர்ச்சி உடையணிந்து வந்த யாஷிகா…!!! யாஷிகாவை குறுகுறுவென பார்த்த பவுன்சர்.. வைரல்...

லெஜெண்ட் பட விழாவிற்கு கவர்ச்சி உடையணிந்து வந்த யாஷிகா…!!! யாஷிகாவை குறுகுறுவென பார்த்த பவுன்சர்.. வைரல் வீடியோ உள்ளே.

yasika

லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் நடித்துள்ள லெஜெண்ட் திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற யாஷிகா ஆனந்த் கவர்ச்சி உடையணிந்து பலரது கவனத்தையும் ஈர்த்தார். நடிகை யாஷிகாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி அருள் சரவணன் தனது நிறுவனத்தின் விளம்பர படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர். தற்போது தி லெஜெண்ட் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

இப்படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி என்ற இரட்டை இயக்குனர்கள் இயக்குகின்றனர். இப்படத்தில் முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கான ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு பல நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். அதில் யாஷிகா ஆனந்த் கவர்ச்சி உடையணிந்து விழாவில் பங்கேற்று பலரது கவனத்தையும் ஈர்த்தார். இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் மேடைக்கு வரும்போது அங்கு நின்று கொண்டிருந்த பவுன்சர் ஒருவர் யாஷிகாவை உற்றுப் பார்ப்பதும், அருகில் யாராவது நம்மை பார்க்கிறார்களா என்று அக்கம்பக்கத்தினரை பார்த்துவிட்டு மீண்டும் யாஷிகாவை பார்த்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இப்படத்தில் ஊர்வசி உத்வாலா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரபு, விஜயகுமார், நாசர், சுமன், லிவிங்ஸ்டன், விவேக், தம்பி ராமையா, சிங்கம்புலி, யோகிபாபு, காளி வெங்கட், மயில்சாமி, கோவை சரளா போன்ற பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Exit mobile version