Home CINEMA NEWS தனது ரசிகர் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த நடிகர் அஜித்…!!! வைரல் வீடியோ இதோ.

தனது ரசிகர் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த நடிகர் அஜித்…!!! வைரல் வீடியோ இதோ.

ajith

அஜித் கடைசியாக நடித்து வெளியான திரைப்படம் வலிமை. இப்படத்தில் அதிக பைக் ரேஸ் காட்சிகளை கொண்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருந்தார்.

அதோடு இப்படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார். இப்படத்தைத் தொடர்ந்து அஜித் மீண்டும் ஹச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் ஏகே61 என்ற பெயரிடப்படாத படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தில் முற்றிலும் வித்தியாசமாக மாறுபட்ட இரண்டு கெட்டப்பில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாயின. சால்ட் அன்ட் பெப்பர் லுக் ஏற்கனவே இணையதளத்தில் வெளியாகி வைரலாக பரவியது.

தற்போது இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க உள்ளார். நடிகர் அஜீத் சமீபத்தில் ரசிகர் ஒருவர் வீட்டிற்கு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Exit mobile version