Home NEWS பாதுகாப்பு குறைவினால் திரும்பி சென்ற பிரதமர் மோடி..!!! பஞ்சாப் முதல்வர் அளித்த பதில்..!!! உண்மையில்...

பாதுகாப்பு குறைவினால் திரும்பி சென்ற பிரதமர் மோடி..!!! பஞ்சாப் முதல்வர் அளித்த பதில்..!!! உண்மையில் என்ன நடந்தது தெரியுமா.

prime minister narendra modi come back from punjab

பிரதமர் மோடி பஞ்சாபில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைப்பதற்காக இன்று பஞ்சாப் சென்றிருந்த மோடி அவர்கள் பாதுகாப்பு குறைபாடு இருந்ததால் பயணத்தை ரத்து செய்துவிட்டு திரும்பி விட்டார்.

இந்தியாவின் பிரதமர் மாநிலங்களுக்கு வரும் பொழுது அவருக்கு பெரிய வரவேற்பு கொடுப்பார்கள் அந்த மாநில அரசு அதுபோல பிரதமர் அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பலத்த பாதுகாப்பு வளையங்களை உருவாக்குவார்கள்.

ஹுசைன்வாலா என்ற இடத்தில் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்திய பிரதமர் ஹெலிகாப்டர் மூலம் பஞ்சாப் செல்ல முடிவு செய்திருந்தார். வானிலை சரியில்லாத காரணத்தால் ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டு காரில் பயணத்தை மேற்கொண்டார்.

மோடி அவர்களின் கார் நெருங்கும் நேரத்தில் அங்கு இருந்த மக்கள் சிலர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கும் மேலாக காத்திருந்த மோடி அதன்பின் அந்த பயணத்தை ரத்து செய்துவிட்டு திரும்ப சென்றார்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் கூறியிருப்பது இது மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு என்றும் அதன் காரணமாக தான் பிரதமர் பயணத்தை ரத்து செய்து விட்டு சென்றுவிட்டார் என்றும் தெரிவித்திருந்தார்கள்.

பிரதமர் ஒரு மாநிலத்திற்கு வரும்போது இப்படி பாதுகாப்பு இல்லாமல் இருக்கலாமா என்று பல கேள்விகளை முன்வைத்து வந்தனர். பிரதமர் மோடி அவர்களும் உங்கள் முதல்வருக்கு நன்றி சொல்லுங்கள் நான் அட்லீஸ்ட் ஏர்போர்ட்டுக்கு உயிரோட அவது வந்தேனே என்று கூறியுள்ளார்.

பஞ்சாப் மாநில முதல்வர் அவர்கள் அளித்த விளக்கத்தில் பிரதமர் மோடி அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் தான் வருவதாக எங்களுக்கு தகவல் வந்தது அதனால் அனைத்து ஏற்பாடுகளும் பாதுகாப்பு குறைபாடு இல்லாமல் செய்து இருந்தோம் ஆனால் திடீரென்று அவர் எங்களிடம் சொல்லாமல் கார் மூலம் வந்துவிட்டார்.

போராட்டம் 3 மணிக்கு முடியும் என்று கூறப்பட்டது பாஜக கூட்டத்திற்கு 7000 பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது 700 பேர் மட்டுமே வந்திருந்தனர். இதனை மறைக்க தான் ஏதேதோ விஷயங்களை தற்போது காரணமாகச் சொல்கிறார்கள் என்று கூறியுள்ளார் பஞ்சாப் முதல்வர்.

Exit mobile version