Home NEWS பிரச்சார வண்டியில் கம்பீரமாக விஜயகாந்த்..!!!பல மாதங்களுக்கு பின் வெளியே வந்த கேப்டன் விஜயகாந்த்..!!!

பிரச்சார வண்டியில் கம்பீரமாக விஜயகாந்த்..!!!பல மாதங்களுக்கு பின் வெளியே வந்த கேப்டன் விஜயகாந்த்..!!!

vijayakanth dmdk

விஜயகாந்த் இவர் எப்பேர்ப்பட்ட நடிகர் என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் நன்கு தெரியும். தன்னைப் பற்றி குறை கூறியவர்கள் முன்னே வளர்ந்து நின்று முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் விஜயகாந்த். ஒரு நேரத்தில் விஜயகாந்த் நடித்த படங்கள் அனைத்தும் பெரிய வசூலை அள்ளிக் கொடுத்தது.

விஜயகாந்த் படத்தில் நல்ல கருத்து இருக்கும் நல்ல சென்டிமெண்ட் காட்சிகள் இருக்கும் என்று ரசித்து பார்த்த மக்களும் உள்ளார்கள். விஜயகாந்த் தேமுதிக கட்சியை ஆரம்பித்து அதிமுகவுடன் கூட்டணி வைத்து ஒரு தேர்தலில் வெற்றியும் பெற்று அதன் பின் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றவர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களைப் பார்க்கவே நடுங்கப் அவர்கள் மத்தியில் சட்டசபையில் தில்லாக எதிர்த்து குரல் கொடுத்து வந்தார் கேப்டன் விஜயகாந்த்.

தற்பொழுது அவருடைய உடல்நிலை சரியில்லாததால் மருத்துவர்கள் அறிவுரையின்படி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். விஜயகாந்தின் தற்போது நிலையை பார்த்த மக்கள் தயவு செய்து அரசியல் என்ற பெயரில் அவரை சிரமப்படுத்த வேண்டாம் ஓய்வெடுக்க சொல்லுங்கள் அவரது உடல் நலமும் முக்கியம் என்று கோரிக்கை வைத்து வந்தனர்.

நேற்று தேமுதிக கொடி நாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் அவர்கள் தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கொடியை ஏற்றி வைத்தார்.

கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வந்த விஜயகாந்த் அங்கு இருந்த கட்சி கொடியை ஏற்றி வைத்தார் அனைவருக்கும் கொடி நாள் வாழ்த்துக்களை தெரிவித்த விஜயகாந்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு காண்பதால் தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த் அவர்களின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் விரைவில் தமிழகம் முழுவதும் மக்களை சந்திப்பதற்காக பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.

தற்பொழுது நாங்கள் அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம் கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை அதே நேரத்தில் தனித்துப் போட்டியிட வேண்டி வந்தால் அதற்கும் தயாராக இருக்கிறோம் தேமுதிகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா.

Exit mobile version