Home CINEMA NEWS இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த்…!!! பல பதக்கங்களை வென்று சாதனை..

இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த்…!!! பல பதக்கங்களை வென்று சாதனை..

தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து புகழின் உச்சியில் இருந்தவர் நடிகர் மாதவன். இவர் இளம் பெண்களின் கனவு கண்ணனாக, சாக்லேட் பாயாக வலம் வந்தவர்.

கடந்த ஆண்டு இவர் நடித்து மற்றும் இயக்கிய திரைப்படம் தி ராக்கெட்ரி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் விளையாட்டு துறையில் பல சாதனைகளை படைத்து வருகிறார்.

இவர் சமீபத்தில் நீச்சல் துறையில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று இந்தியா சார்பில் பல பதக்கங்களை வென்றுள்ளார். இந்த நிலையில் தற்போது மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற ஐந்தாவது கேலோ இந்தியா யூத் நீச்சல் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று தங்கம், வெள்ளி என பல பதக்கங்களை வென்று குவித்துள்ளார்.

அவர் மகாராஷ்டிரா அணி சார்பாக நீச்சல் போட்டியில் பங்கேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்து நடிகர் மாதவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கடவுளின் ஆசிர்வாதத்தால் வேதாந்த் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் பிரிவுகளில் தங்கப்பதக்கமும், 400 மீட்டர் 800 மீட்டர் பிரிவுகளில் வெள்ளி பதக்கமும் வென்றுள்ளார்.

மேலும் கலப்பு பிரிவுக்கான போட்டிகளையும் சேர்த்து மொத்தம் 5, தங்கப்பதக்கமும் மற்றும் 2 வெள்ளி பதக்கங்களை வென்று குவித்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் சமூக வலைத்தளங்கள் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வேதாந்திற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version