Home NEWS பிரபல நடிகை வனிதா விஜயகுமார் பாஜகவில் இணையயுள்ளதாக தகவல்..!!!!

பிரபல நடிகை வனிதா விஜயகுமார் பாஜகவில் இணையயுள்ளதாக தகவல்..!!!!

vanitha vijayakumar

வனிதா விஜயகுமார் இவர் பிரபல நடிகர் விஜயகுமார் அவர்களின் மகள் என்பது அனைவரும் அறிந்ததே இவருடைய முதல் படம் தமிழில் தளபதி விஜயுடன் சந்திரலேகா என்ற படத்தில் ஜோடியாக நடித்திருந்தார் அதனைத் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்த வனிதா குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு சில காரணங்களால் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். வனிதா 2 முறை திருமணம் செய்து விவாகரத்தும் பெற்றவர்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டார். மனதில் பட்டதை முகத்துக்கு நேராக பேசும் இவரது கேரக்டர் சக போட்டியாளர்கள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஒருசிலர் வனிதா இரும்புப் பெண் என்றெல்லாம் ஆர்மி ஆரம்பித்தார்கள். அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டார்.

திடீரென்று வனிதா பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியானது. இருவரும் தேதி அறிவித்தார்கள் . மூன்றாவது திருமணத்தை செய்து கொண்டார் வனிதா. தனது மூன்றாவது திருமண வாழ்க்கையை பீட்டர் பாலுடன் தொடங்கிய வனிதாவிற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்தது. இது என்னுடைய வாழ்க்கை நான் தான் முடிவு செய்ய வேண்டும் மற்றவர்கள் கிடையாது என்று நோஸ்கட் செய்தார் வனிதா.

சமீபத்தில் வனிதா பீட்டர்பால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். அதனை உறுதிப்படுத்தும் வகையில் வனிதா சில யூடியூப் சேனல்களில் விளக்கம் கொடுத்திருந்தார். பீட்டர்பால் மது போதைக்கு அடிமையானவர் என்று கூறியிருந்தார்.

தற்பொழுது செய்தி என்னவென்றால் வனிதா விஜயகுமார் பாஜகவில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அவர் தந்தை விஜயகுமார் அவர்கள் பாஜகவில் இணைந்தது போல மகளும் பாஜகவில் சேர உள்ளார். விரைவில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் சில பிரபலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பாஜகவில் இணைவது பார்க்க முடிகிறது.

Exit mobile version