Home CINEMA NEWS ஹிந்தியில் மாபெரும் சாதனை செய்த ஜோதிகா படம்..!!! அதிர்ந்து போன ஹிந்தி திரையுலகம்.

ஹிந்தியில் மாபெரும் சாதனை செய்த ஜோதிகா படம்..!!! அதிர்ந்து போன ஹிந்தி திரையுலகம்.

jyothika surya

ஜோதிகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகளில் இவரும் ஒருவர்.SJ சூர்யா இயக்கத்தில் அறிமுகமான ஜோதிகா முதல் படம் தல அஜித்தின் வாலி. வாலி என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த ஜோதிகா மக்களிடம் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து எஸ் ஜே சூர்யா இயக்கும் அடுத்த படமான குஷி படத்தின் வாய்ப்பைப் பெற்றார்.

தளபதி விஜயுடன் நடித்த குஷி படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஏற்கனவே அக்கா நக்மா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர். அதேபோல ஜோதிகாவும் நிறைய தமிழ் பட வாய்ப்புகள் பெற்று தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். அதன்பின் சூர்யாவுடன் காதல் பிறகு திருமணம் என்று அவரது வாழ்க்கை ஒரு பக்கம் போய்க் கொண்டிருந்தது. தற்போது ஜோதிகவிற்கு தேவ் , தியா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு திரையில் தலைகாட்டாமல் சினிமாவை விட்டு விலகியிருந்த ஜோதிகா தற்பொழுது நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து கொண்டிருக்கிறார்.

குறிப்பாக பெண்களை ஊக்குவிக்கும் கதைகளில் நடித்து வருகிறார். இவர் நடித்த 36 வயதினிலே படத்திற்கு குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஜோதிகாவிற்கு இவனும் பவர் உள்ளதா என்று பல தயாரிப்பாளர்களும் ஆச்சரியப்பட்டனர். அந்தப் படத்திற்கு பிறகு தமிழில் நிறைய இயக்குனர்கள் ஜோதிகாவை அணுக ஆரம்பித்தார்கள். சமீபத்தில் ஜோதிகா நடித்து வெளிவந்த ராட்சசி என்ற படம் மாபெரும் வெற்றி பெற்றது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக நடித்திருந்தார்.

கிட்டத்திட்ட அந்தப் படம் பார்க்க சமுத்திரக்கனியின் சாட்டை சாயல் இருக்கும். மாபெரும் வெற்றி பெற்ற ராட்சசி படத்தை இந்தியில் டப் செய்து யுடியூபில் வெளியிட்டிருக்கிறார்கள் தற்பொழுது அந்த படம் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.

பெரிய பிரபலங்களின் படங்களை இந்தியில் 10 மில்லியனை தாண்டுவது கடினமான இந்த நேரத்தில் ஜோதிகாவின் படத்திற்கு 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று அது எப்படி என்று ஆச்சரியத்தில் உள்ளன ஹிந்தி திரையுலகத்தினர்.

Exit mobile version