Home CINEMA NEWS கோட் சூட்டில் கெத்து காட்டும் வைகைப்புயல் வடிவேலு..!!! வெளியானது நாய் சேகர் RETURNS படத்தின் பர்ஸ்ட்...

கோட் சூட்டில் கெத்து காட்டும் வைகைப்புயல் வடிவேலு..!!! வெளியானது நாய் சேகர் RETURNS படத்தின் பர்ஸ்ட் லுக்

vadivelu naai sekar returns first look

வடிவேலு பல வருடங்களாக சினிமாவில் நடிக்காவிட்டாலும் இவருடைய முந்தைய படங்கள் மற்றும் இவர் பேசிய வசனங்கள் இன்றுவரை பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.

பலர் மீம்ஸ் கிரியேட்டர்ஸ் வடிவேலு அவர்களின் புகைப்படத்தை அல்லது வசனத்தை பயன்படுத்தி தான் மீம்ஸ் உருவாக்குவார்கள். வடிவேலு அவர்களின் ஒரு சில புகைப்படங்களை பார்த்தாலே சிறிதாக புன்னகை நம்மை எட்டிப்பார்க்கும். அந்த அளவிற்கு முக பாவனையால் நகைச்சுவை செய்திருப்பார்.

தமிழ் சினிமாவில் வடிவேலு அவர்களை மிஸ் செய்கிறோம் என்று வருத்தப்பட்ட ரசிகர்களுக்கு சமீபத்தில் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க வருகிறேன் என்று இன்ப செய்தி ஒன்றை அறிவித்தார் வடிவேலு. எனக்கு எண்டே கிடையாது என்று பேசிய வடிவேலு இயக்குனர் சுராஜ் அவர்கள் இயக்கத்தில் நாய் சேகர் என்ற படத்தில் நடிப்பதாக அறிவித்திருந்தார் ஏற்கனவே இந்த நாய் சேகர் என்ற டைட்டில் நகைச்சுவை நடிகர் சதீஷ் அவர்களின் படத்திற்கு வைத்துவிட்டார்கள் ஆனால் வடிவேலு அந்த நாய் சேகர் என்ற டைட்டிலை பெறுவதற்காக ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்திடம் முயற்சி செய்து இருக்கிறார் ஆனால் அந்தக் கதைக்கு நாய் சேகர் என்ற தலைப்பு தான் சரியான தலைப்பு அதை தவிர வேறு எந்த ஒரு தலைப்பும் பொருந்தாது படமும் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்று நாசூக்காக மறுத்து விட்டனர்.

நாய் சேகர் படத்தின் பர்ஸ்ட் லுக்கில் சதீஷ் நாயுடன் இருப்பது போன்று புகைப்படம் ஒன்று வெளியிட்டு நாய் சேகர் டைட்டில் அவர்களுக்கு தான் என்று உறுதிப்படுத்தினார்கள் ஏஜிஎஸ் நிறுவனம் ஆனால் வடிவேலுக்கு நாய் சேகர் என்ற டைட்டில் மிகவும் பிடித்துப்போக தான் நடிக்கும் படத்திற்கு நாய் சேகர் என்று தான் பெயர் வைக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தாராம் பல பேச்சுவார்த்தைகள நடந்தும் அந்த டைட்டில் கிடைக்காததால் சுராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்கு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்று பெயர் வைத்துள்ளார்கள்.

அதில் கோட் சூட் போட்டுக்கொண்டு ஸ்டைலாக வடிவேலு அவர்கள் சோபாவில் அமர்ந்து கொண்டு கையில் நாய் சங்கிலியை பிடித்துக்கொண்டு நாய்களுடன் இருக்கும்படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டரில் ஒரிஜினல் என்று குறிப்பிட்டுள்ளார்கள் இது என்னவோ சதீஷின் நாய் சேகர் படக்குழுவினர் மீது அதிருப்தியால் போட்டு இருப்பார்களோ என்று பேசப்பட்டு வருகிறது.

குறிப்பாக வடிவேல் அவர்களின் ஸ்பைக் ஹேர்ஸ்டைல் தலைவன் கண்டிப்பா இன்னொரு ரவுண்டு வருவருனு எதிர்பார்க்க வைக்குது.

Exit mobile version