Home CINEMA NEWS சித்தி-2 வெண்பாவா இது..!!! இளசுகளை சுண்டி இழுக்கும் புகைப்படங்கள் இதோ.

சித்தி-2 வெண்பாவா இது..!!! இளசுகளை சுண்டி இழுக்கும் புகைப்படங்கள் இதோ.

preethi sharma

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலில் ஒன்று சித்தி 2 சீரியல். சித்தி 2 தொடரில் கதாநாயகியாக நடிப்பவர் வெண்பா என்ற ப்ரீத்தி ஷர்மா. ப்ரீத்தி ஷர்மா டிக்டாக் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.

அவருக்கு சொந்த ஊர் லக்னோ. தற்போது கோயம்புத்தூரில் குடும்பத்துடன் செட்டில் ஆகி உள்ளார். ப்ரீத்தி ஷர்மா 11ஆம் வகுப்பு படிக்கும்போது கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை என டெலி பிலிமில் நடித்துள்ளார். இதன் மூலம் மீடியாகுள் அறிமுகமானார்.

பல விளம்பரங்களில் நடித்துள்ளார். அதோடு மாடலில் செய்து வருகிறார். அவர் கல்லூரி படிக்கும்போது எங்க போன ராசா என வெப் சீரிஸில் நடித்துள்ளார். அதன்மூலம் கலர்ஸ் தொலைக்காட்சியில் திருமணம் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த தொடரில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த தொடரில் நவீனை உருகி உருகி காதலித்து நடித்ததால் நவீன்-அனிதா ஜோடி மக்களிடையே பெரிதளவு பேசப்பட்டது.

அந்த தொடரில் நடித்துக் கொண்டிருக்கும்போதே சித்தி 2 தொடர் வாய்ப்பு வந்தது. அதன் பிறகு சித்தி 2 தொடரில் நந்தன் லோகநாதன் ஜோடியாக வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார்.

சன் டிவி சீரியலில் பிரபல தொடரான சித்தி 2 தொடர் டிஆர்பியில் நல்ல ரேட்டிங் பெற்று வந்தது. ராதிகா தொடரிலிருந்து விலகினாலும் கவின் வெண்பா என்ற கதாபாத்திரத்திற்காக ரசிகர்கள் இன்றளவும் சித்தி 2 தொடரை ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.

அதோடு கென் கருணாஸ் மற்றும் அவரது அம்மா கிரேஸ் ஆகியோர் இடம்பெற்ற ‘வாடா ராசா’ என்ற மியூசிக் ஆல்பத்தில் ப்ரீத்தி ஷர்மா நடனமாடி அசத்தியிருப்பார்.

சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

Exit mobile version