Home NEWS கடும்பனியிலும் பிரசவ வலியால் துடித்த பெண்ணை 6 1/2 கிலோமீட்டர் தோளிலே சுமந்து சென்று மருத்துவமனையில்...

கடும்பனியிலும் பிரசவ வலியால் துடித்த பெண்ணை 6 1/2 கிலோமீட்டர் தோளிலே சுமந்து சென்று மருத்துவமனையில் அனுமதித்த ராணுவ வீரர்கள்..!!!

indian army soliders carried pregnant women admitted in hospital

பெரும்பாலும் சமூக வலைதளங்களில் அரசியல் சண்டைகளை அரசியல் செய்திகளும் தான் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கிறது எல்லையில் நடக்கும் ராணுவத்தினரை பற்றி செய்திகள் அவ்வப்போது தான் வரும் அந்த செய்திகள் படிக்கும்போது நம்மை அறியாமலேயே அவர்கள் மீது மரியாதையும் அன்பும் வரும் அந்த வகையில் சமீபத்தில் வெளியான செய்தி தான் இது.

காஷ்மீர் மலைப்பிரதேசத்தில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை பனிபொழிவில் ஸ்ட்ரெச்சரில் வைத்து 6 கிலோமீட்டர் தூரம் ராணுவத்தினர் தூக்கி சென்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

காஷ்மீரின் பகுதியில் உள்ள பனி பிரதேசத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் மருத்துவ உதவி கேட்கும் போது மக்கள் ராணுவத்தினரை தொடர்பு கொண்டனர். ராணுவ மருத்துவக் குழுவுடன் அங்கு விரைந்த ராணுவ வீரர்கள் பெண்ணிற்கு சிகிச்சை அளிக்க முயன்றபோது பெண்ணிற்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் இருந்ததால் கொட்டும் பனியில் ஆறு அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு அந்தப் பெண்ணை ஸ்ட்ரெச்சரில் வைத்து கொண்டு தூக்கி சென்றார்கள்.

கடும் பனியிலும் ராணுவத்தினர் அந்த பெண்ணை தூக்கி கொண்டு மருத்துவமனையில் அனுமதித்த இந்தச் சம்பவம் உறவினர்களின் கிராம மக்களையம் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .

ராணுவ வீரர்கள் எவ்வளவு கஷ்டத்தை சந்தித்து வந்தாலும் மக்களைப் பாதுகாப்பதில் தயங்க மாட்டார்கள் என்பதை இந்த விஷயம் நிரூபித்துள்ளது.

Exit mobile version