Home CINEMA NEWS ஆச்சு அசல் அம்மாவை போலவே இருக்கும் சூர்யா ஜோதிகாவின் மகள் தியா..!!! கியூட் புகைப்படம்.

ஆச்சு அசல் அம்மாவை போலவே இருக்கும் சூர்யா ஜோதிகாவின் மகள் தியா..!!! கியூட் புகைப்படம்.

suriya jyothika daughter and son pictures

ஜோதிகா வாலி என்ற படத்தின் மூலம் எஸ் ஜே சூர்யா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவர். அதன்பின் தளபதி விஜய்யின் குஷி திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா ஜோதிகாவை ஹீரோயினாக அறிமுகம் செய்தார்.

முதல் படமே அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ஜோதிகா ரசிகர்கள் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்தார். குறிப்பாக குஷி படத்தில் இடம்பெற்ற மேகம் கருக்குது என்ற பாடல் ஜோதிகாவிற்கு பெரிய ஹிட் பாடலாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஜோதிகாவின் கால்ஷீட்டுக்காக காத்திருந்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் பலர். ஜோதிகா சூர்யா இருவருக்கும் சினிமாவில் நடிக்கும் போதே பழக்கம் ஏற்பட்டு முதலில் நண்பர்களாக இருந்தவர்கள் அதன்பின் காதலிக்க தொடங்கினார்கள்.

சூர்யாவும் எனக்கு ஜோதிகா தான் வேண்டும் என்று திட்டவட்டமாக இருந்தார் ஜோதிகாவும் சூர்யாவை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதமாக இருந்ததாலும் சில வருடங்கள் காத்திருந்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர்.

தற்பொழுது சூர்யா நல்ல நல்ல படங்களில் நடித்து தமிழில் முன்னணி நடிகராக இருக்கிறார் ஜோதிகா தனது குடும்பத்தை கவனித்து வந்தாலும் பெண்களை முன்னிலைப்படுத்தும் படங்களில் நடித்து வருகிறார் ஜோதிகா சூர்யாவின் தயாரிப்பு நிறுவனத்தையும் பார்த்து வருகிறார்.

ஜோதிகாவின் மகன் மகள் தேவ் தியா இருவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஜோதிகாவின் மகளை பார்க்கையில் ஆச்சு அசல் அம்மா ஜோதிகா போலவே இருக்கிறார்.

Exit mobile version