Home NEWS கோவையில் ஸ்விகி ஊழியரை தாக்கிய போக்குவரத்து காவலர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்!

கோவையில் ஸ்விகி ஊழியரை தாக்கிய போக்குவரத்து காவலர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்!

swiggy employee coimbatore traffic police

கோவையில் SWIGGY நிறுவன ஊழியரை போக்குவரத்து காவலர் தாக்கிய காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை நீலாம்பூர் சேர்ந்த பிஎஸ்சி படித்த பட்டதாரி மோகன சுந்தரம் என்பவர் SWIGGY ஃபுட் டெலிவரி செய்யும் வேலையை செய்து வந்துள்ளார்.

இன்று தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது தனக்கு முன்பு இருந்த பெண்ணின் வாகனத்தை இடித்து விட்டு வேறு ஒருவர் செல்ல மோகனசுந்தரம் அதனை தட்டிக்கேட்க முயன்றுள்ளார்.

அப்போது அந்தப் பெண்ணின் மீது இடித்து விட்டு சென்ற வாகனத்தை பிடிக்க முயன்றபோது போக்குவரத்து காவலரான சதீஷ் என்பவர் பளார் பளாரென்று என்று கன்னத்தில் அறைந்து வாகனச் சாவியை எடுத்துக்கொண்டாராம்.

நீ எல்லாம் பெரிய ஆளா டா நேஷனல் மாடல் ஸ்கூல் அருகே வண்டியை நிறுத்திரா அளவுக்கு நீ பெரிய ஆள் ஆகி விட்டாயா நீ என்ன ரவுடியா டா இல்ல போலீசா என்று அவருடைய ஹெட்செட்டை தூக்கி எறிந்துள்ளார் அந்த போக்குவரத்து காவலர் சதீஷ்.

இது குறித்து SWIGGYல் வேலை செய்து வரும் மோகன சுந்தரம் கூறியுள்ளது “என்கிட்ட ஹாஸ்பிடல் போக கூட காசு இல்ல சார் நேத்து 500 ரூபாய் வச்சிருந்தேன் 200 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுட்டேன் மீதி தான் வீட்டுக்கு கொண்டு போனேன். . ஸ்விகி என்னுடைய பார்ட் டைம் ஒர்க் நான் பிசினஸ் பண்றேன் ஸ்டேஷனரி ஷாப் வச்சிருக்கேன் அதோட வாடகை கொடுக்க முடியாமல் சிரமப்பட்டு வர அதுக்காக தான் ஸ்விகி-ல டெலிவரி பண்றேன் அதுல வர காசுல வாடகையும் கொடுத்துட்டு வர்றேன். கொரோனா காலகட்டத்துல எத்தனையோ ஸ்டேஷனரி ஷாப் மூடிட்டாங்க. ஸ்விகி ல வர காசுல தான் நான் கடனை கட்டிக்கிட்டு இருக்கேன் சார். பிசினஸ் பண்றது தான் என்னோட லட்சியம் சார் நான் கோகுலம் ஐடி பார்க்கல ஐ டி யில் வேலை பண்ணியிருக்கேன். எனக்கு பிசினஸ் பண்ண ஆசை என் குடும்ப சூழ்நிலை நான் ஐடி வேலையை விட்டுட்டு தொழில் தொடங்கி இருக்கிறேன் எனக்கு இது போல நடந்தது கஷ்டமா இருக்கு என்று வருத்தத்துடன் கூறியுள்ளார் மோகனசுந்தரம்.

தற்பொழுது ஸ்விகி நிறுவன ஊழியரை தாக்கிய போக்குவரத்து காவலர் சதீஷ் காத்திருப்போர் பட்டியலுக்கு மற்றம் செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகிறது கோவை மாநகர காவல்துறை.

Exit mobile version