Home CINEMA NEWS நயன்தாரா திருமணத்திற்கு தமிழக முதல்வர் வர வாய்ப்பு..!!!முதல்வருக்கு திருமண பத்திரிகை கொடுத்து திருமணத்திற்கு அழைத்த நயன்தாரா...

நயன்தாரா திருமணத்திற்கு தமிழக முதல்வர் வர வாய்ப்பு..!!!
முதல்வருக்கு திருமண பத்திரிகை கொடுத்து திருமணத்திற்கு அழைத்த நயன்தாரா விக்னேஷ் சிவன்…!!!

nayanthara wedding june 9th 2022

நயன்தாரா ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடித்த ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் கேரளாவில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த நயன்தாராவை தமிழில் சரத்குமாருக்கு ஜோடியாக அறிமுகப்படுத்தினார்கள்.

ஐயா திரைப்படம் வருவதற்கு முன்பே மலையாளத்தில் சில படங்களில் நடித்து வந்தார் நயன்தாரா. தமிழில் ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் காத்திருந்தேன் என்று முதல் படத்திலேயே அவருக்கு ஒரு பெரிய ஹிட் பாடல் அமைந்தது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் தமிழ் சினிமாவில் நயன்தாராவிற்கு புக் ஆனது. நயன்தாரா தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்தார்.

கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு பெரிய இடத்தை பிடித்துள்ள நயன்தாரா தனது வாழ்க்கையில் சிம்புவுடன் காதல் அதன் பின் காதல் தோல்வி மீண்டும் பிரபுதேவாவுடன் காதல் அந்த காதலும் தோல்வி என்று பெரிய ஏமாற்றத்தில் மனம் நொந்து போன நயன்தாரா திருமணம் செய்து கொள்ளாமல் சினிமாவில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.

ஆயிரம் பிரச்சனைகள் வந்தாலும் சினிமாவில் நயன்தாராவை அசைக்க முடியாத இடத்தில் ரசிகர்கள் வைத்திருந்தார்கள் இன்றும் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகிறார்கள்.

நானும் ரவுடிதான் என்ற படத்தின் மூலம் இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு அறிமுகமாக அங்கு ஆரம்பித்ததுதான் இவர்களது காதல் பல வருடங்களாக காதலித்து வந்து நன்கு புரிந்து கொண்டு கோயில்களில் பல பூஜைகள் பரிகாரங்கள் செய்து கொண்டு தற்போது திருமணத்திற்கு தயாராகி வருகிறார்கள் இந்த காதல் ஜோடி.

பல வருடங்களாக காதலராக சுற்றிவந்த நயன் விக்கி ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளார்கள். நயன்தாராவின் திருமணத்திற்கு விஐபிகளுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்கும் பணி மும்மரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் நயன்தாரா தனது வருங்கால கணவர் விக்னேஷ் சிவன் உடன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை சந்தித்து தனது திருமண அழைப்பிதழை வழங்கியுள்ளார். தமிழக முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து திருமண அழைப்பிதழ் வைத்து வந்துள்ளனர் நயன் விக்கி.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் நயன்தாராவின் திருமணத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது அதுமட்டுமல்லாமல் நயன்தாரா உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நல்ல தோழி என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version