Home NEWS திருமண விழாவில் எஞ்சிய உணவை நள்ளிரவு ஏழை மக்களுக்கு வழங்கிய சிங்கப்பெண்…!!! குவியும் பாராட்டுகள்.

திருமண விழாவில் எஞ்சிய உணவை நள்ளிரவு ஏழை மக்களுக்கு வழங்கிய சிங்கப்பெண்…!!! குவியும் பாராட்டுகள்.

food

நள்ளிரவில் பெண் ஒருவர் திருமண விழாவில் எஞ்சிய உணவை நடைமேடையில் வசிக்கும் ஏழை மக்களுக்கு வழங்கி அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறார். மேற்கு வங்கத்தில் நள்ளிரவு ஒரு மணி அளவில் தன்னுடைய சகோதரர் திருமண விழாவில் எஞ்சிய உணவை திருமண உடையிலேயே ரயில் நிலையத்தில் வசிக்கும் ஏழை மக்களுக்கு வழங்கிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

அந்தப் பெண் எந்தவித சிரமமும் பாராமல் நள்ளிரவு என்று கூட பாராமல் எஞ்சிய உணவை கொண்டு வந்த ஏழை மக்களுக்கு உணவு வழங்கிய பெண்ணின் மனிதநேயத்திற்கு அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்தப் பெண் ஆதரவற்றவர்களுக்கு உணவு பரிமாறும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. மேற்கு வங்கத்தின் ரனாகாட் ஸ்டேஷனில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

திருமண வரவேற்பு விழாவில் எஞ்சிய உணவை இரவு ஒரு மணி அளவில் கண்டவுடன் மணமகனின் சகோதரி பாபியா கர் உணவை ஏழைகளுக்கு வழங்கியுள்ளார். இரவு நீண்டநேரம் ஆகிவிட்டதே என்று எண்ணாமல் திருமண அலங்கார உடையிலேயே சிறிதும் முகம் சுளிக்காமல் அங்குள்ள ஏழை மக்களுக்கு உணவுகளை வழங்கியுள்ளார். இத்திருமணத்திற்கு வந்த புகைப்படக் கலைஞர் எதேர்ச்சையாக பார்த்ததும் புகைப்படமெடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி லைக்குகளை குவிந்து வருகிறது.

Exit mobile version