Home CINEMA NEWS வாடிய முகத்துடன் SAC ..!!! வாரிசு விஜய் இல்லாமல் நடந்த சதாபிஷேகம்…!!! பிள்ளை மருமகள் பேரன்...

வாடிய முகத்துடன் SAC ..!!! வாரிசு விஜய் இல்லாமல் நடந்த சதாபிஷேகம்…!!! பிள்ளை மருமகள் பேரன் பேத்தி யாருமே வரலை..!!!

thalapathy vijay sac 80 sathabishekam

தளபதி விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர். விஜய் திரைப்படங்கள் வெளியாகும் போது ரசிகர்கள் தியேட்டரை அலங்கரித்து கொண்டாடி மகிழ்வார்கள் அதுமட்டுமல்லாமல் குடும்பம் குடும்பமாக விஜயின் திரைப்படங்களை காண்பதற்காக தியேட்டருக்கு படையெடுப்பார்கள்.

விஜயின் படங்கள் வெளியாகப் போவது என்றால் தியேட்டர் ஓனர்கள் மகிழ்ச்சியில் இருப்பார்கள். அந்த அளவிற்கு விஜய் படம் என்றாலே பெரிய லாபத்தை தரும் என்ற நம்பிக்கை தியேட்டர் உரிமையாளர்களுக்கு எப்போதுமே இருக்கும்.

சமீபத்தில் கலவையான விமர்சனங்களை சந்தித்து பீஸ்ட் திரைப்படம் நல்ல வசூல் செய்தது. தற்பொழுது விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். வாரிசு படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

வருகின்ற பொங்கல் தினத்தன்று வாரிசு திரைப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிவித்துள்ளார்கள் படக்குழுவினர்கள். விஜய் வாரிசு படத்தில் பிஸியாக இருந்து வருகிறார்.

Vijay in Varisu Shooting Spot

இந்நிலையில் இன்று தளபதி விஜயின் தந்தை SAC அவர்கள் தனது 80 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு தனது மனைவியுடன் சென்று சிறப்பு யாக பூஜை செய்து சாமி தரிசனம் செய்துள்ளார் SAC. மகன் விஜய் பேரில் அர்ச்சனை செய்து உருகி வேண்டிக்கொண்டார்.

80 வயதை நெருங்கும் பெற்றோர்களுக்கு சதாபிஷேகம் செய்து அழகு பார்க்கும் மகன்கள் மகள்கள் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆன விஜய் தன்னுடைய அப்பாவின் சதாபிஷேக விழாவில் கலந்து கொள்ளாதது அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜய் வர முடியவில்லை என்றால் விஜயின் மனைவி அல்லது குழந்தைகள் வந்திருக்கலாம்.

என்ன தான் விஜய் பிஸியாக இருந்தாலும் தனது தந்தைக்காக ஒரு நாள் ஒதுக்கி இருக்கலாமே என்று பலர் சமூக வலைத்தளத்தில் கேள்வி கேட்டு வருகின்றனர். விஜயின் தந்தை SAC சதாபிஷேக விழாவிற்கு விஜய் முன்னின்று செய்யாதது தவறு தான் என்று பலர் தங்களது பதிவை பதிவிட்டு வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க இது அவர்களது குடும்ப பிரச்சினை இதைப் பற்றி ஏன் சமூகவலைத்தளத்தில் விவாதிக்கிறார்கள் என்று விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் கூறி வருகிறார்கள் வருகிறார்கள்.

Exit mobile version