Home CINEMA NEWS அரைகுறை ஆடை அணிந்து சென்னை வந்து இறங்கிய விஜயின் பீஸ்ட் பட நாயகி பூஜா...

அரைகுறை ஆடை அணிந்து சென்னை வந்து இறங்கிய விஜயின் பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டே..!!! போட்டோகிராபர்களை திக்குமுக்காட வைத்த நடிகை.

pooja hegde beast heroine in chennai airport

பூஜா ஹெக்டே மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்த முகமூடி என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் முதல் படம் தோல்வியை சந்தித்தாலும் அந்த படத்தில் இடம்பெற்ற வாய மூடி சும்மா இருடா என்ற பாடல் இவருக்கு பெரிய ஹிட் பாடலாக அமைந்தது.

அம்மணிக்கு தமிழில் பட வாய்ப்புகள் வராததால் தெலுங்கு தேசத்தில் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் பூஜா ஹெக்டே தெலுங்கில் பிரபலமான இவருக்கு ரசிகர்கள் ஏராளம். குறிப்பாக இவர் சமீபத்தில் அல்லு அர்ஜுனுடன் ஆலா வைகுந்தபுர்ரமுலூ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் அந்த படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா என்ற பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால் இவர் இன்னும் பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து தெலுங்கு படத்தில் கமிட் ஆன பூஜாவிற்கு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நெல்சன் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பீஸ்ட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படிங்க : கொல்கத்தா காளியாக அவதாரம் எடுத்த வனிதா விஜயகுமார்…!!! அட கொடுமையே…!!! .

விஜய்யின் பிறந்த நாளுக்கு முன்தினம் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியானது. கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டு விஜய் நிற்பதுபோல மாஸான ஃபர்ஸ்ட் லுக் வெளியானது அதனைத் தொடர்ந்து அன்று இரவு 12 மணிக்கு வெளியான செகண்ட் லுக்கில் ஹெலிகாப்டர் விஜய்க்கு பின்னே பறந்து கொண்டிருக்க விஜய் கையில் துப்பாக்கியை லோட் செய்ய வாயில் புல்லட்டை வைத்துக்கொண்டு மாஸான லுக்கில் வெளியானது போஸ்டர். அதை பார்த்த பூஜா ஹெக்டே. நடிகர் விஜய் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து விரைவில் பீஸ்ட் பட சூட்டிங்கில் சந்திக்கிறேன் என்று டுவிட் செய்திருந்தார்.

கொரோனா காலக்கட்டம் என்பதனால் தமிழகத்தில் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருந்தது தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்க அனுமதி கிடைத்த பின் பீஸ்ட் படத்தின் சில காட்சிகளை சென்னையில் படமாக்க உள்ளனர்.

படத்தின் நாயகி பூஜா ஹெக்டே சென்னைக்கு விமானம் மூலம் வந்து இறங்கினார். அரைகுறையான உடை அணிந்துகொண்டு ஏர்போர்ட்டில் பூஜா வலம் வந்தவுடன் ரசிகர்களும் போட்டோகிராபர் கூடவே சென்றனர். சென்னை வந்து இறங்கிய முதல் நாளே தாராளம் காட்டி ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

Exit mobile version